BREAKING NEWS
latest

Monday, December 3, 2018

கலிபோர்னியாவில் காட்டுத்தீ!


அமெரிக்காவின்  கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி   பலியானோர்  எண்ணிக்கை   25 ஆக உயர்ந்துள்ளது என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்

அமெரிக்காவின்  வடக்கு  கலிபோர்னியாவில்   பல்வேறு  இடங்களிலும் காட்டு தீ பரவி   வருகிறது   .மொத்தம்   16  இடங்களில்   தீப்பிடித்து   உள்ளது

  பல ஏக்கர் நிலப்பரப்புக்குள் தீ   வேகமாக  பரவி  வருவதாகவும் இதனால் ஏராளமான  வாகனங்கள்   வீடுகள்  தீயில்   கருகி உள்ளதாகவும்  கலிபோர்னியா அரசாங்கம்  தெரிவித்துள்ளது.

சுற்றுவடடார பகுதிகளில் இருந்து சுமார்  2 இலட்சம் மக்கள்  பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்

இதற்கிடையே காட்டு  தீயில் சிக்கி  9 பேர் உடல் கருகி   உயிரிழந்துள்ளனர் என முதற்கடட  தகவல் வெளியானது

தீப்பிடித்த பகுதிகளில் மீட்ப்புப்பணிகளை மேற்கொள்ளமுடியாத  அளவிற்கு நிலைமை  மோசமாக உள்ளதாகவும் அதன்காரணமாக உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகமாகலாம் எனவும்  மீட்ப்புக்குழு தெரிவித்தது

இந்நிலையில் தற்போது காட்டுத்தீயில் சிக்கி   பலியானோர்  எண்ணிக்கை  25 ஆக உயர்ந்துள்ளது  என மீட்ப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்

தொடர்ந்தும் அங்கு   மீட்ப்புப்பணிகள் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது 

« PREV
NEXT »

Facebook Comments APPID