BREAKING NEWS
latest

Sunday, October 7, 2018

எவ்வளவு அடிச்சாலும் தாங்குவம் ரெம்ப நல்லாட்சி அல்லோ!

நடிகர் வடிவேலுவின் நகைச்சுவைகளும் அவரின் நடிப்பின் பாங்கும் யதார்த்தத்தோடு சம்பந்தப்பட்டவை.

ஆட்டோ வைத்திருக்கும் வடிவேலு காலையில் எழுந்து தன் பெற்றோரை வணங்குகின்ற பக்குவமும் மாலை ஆறு மணிக்குப்பின்னர் மது அருந்திவிட்டு  வீட்டுக்கு வந்து பெற்றோரை அதட்டுகின்ற போக்கும் நம் சமூகத்தில் இருக்கக் கூடியவை.

இதுபோலத்தான் வடிவேலுவை சிலர் கடுமையாக அடிக்கின்றனர். அடிகாயத்துடன் வீட்டு க்கு வருகின்ற வடிவேலுவிடம் நடிகை ஆர்த்தி கேட்கிறார். அவங்களுக்கு ஏன் நீ திருப்பி அடிக்கவில்லை என்று. இதற்கு வடிவேலு சொல்லுகிறார், என்னை அடித்தவங்களில ஒருத்தன் சொன்னான். எவ்வளவு அடிச்சாலும் தாங்கு கிறான். இவன் ரொம்ப நல்லவன் என்று. அதாலதான் நான் திருப்பி அடிக்கவில்லை.

வடிவேலுவின் இந்த நகைச்சுவையை நினைக்கும்போதெல்லாம் எங்களின் தமிழ் அரசியல் தலைமையின் நினைப்புத்தான் வரும்.

நல்லாட்சி என்ற ஒரு வெற்றுச் சொற்பதத்துக் காக அந்த ஆட்சி எங்களுக்கு எந்தக் கெடுதி செய்தாலும் அதுபற்றிக் கதைக்கக் கூடாது என்று தமிழ் அரசியல் தலைமை நினைக்கிறது.

இங்குதான் வடிவேலுவின் மேற்போந்த நகைச்சுவை கனகச்சிதமாகப் பொருந்திக் கொள்கிறது.

தற்போது நடப்பது நல்லாட்சி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை நம்புகிறது. 

இந்த நம்பிக்கையின் பின்னால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் அதற்கான சலுகைகளும் இருக்கின்றபோதிலும் பொதுவெளியில் நல்லாட்சி தீர்வு தரும். அதற்காக புதிய அரசியல மைப்புச் சீர்திருத்தத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கைகளை கூட்டமைப்பு வெளி யிட்டு வருகிறது.

ஆக, உள்நோக்கம் ஒன்றாகவும் அதற்கான வெளியக கருத்துருவாக்கம் வேறாகவும் இருந்தால், தமிழ் அரசியல்கைதிகளும் காணாமல் போனவர்களின் உறவுகளும் நொந்துகெட்டு நூலாகப்போவதைத் தவிர வேறு எதுவும் நடக்கமாட்டாது.

நல்லாட்சியில் ஜனாதிபதி, பிரதமர் என்ற இருவரும் தம்மளவில் உடன்பாடு குறைந்தவர்களாகவே ஆட்சியைச் செலுத்துகின்றனர்.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரத மருக்கு பூரண ஆதரவு வழங்குபவர்களாக இருக்கும் அதேவேளை, ஜனாதிபதியுடனான தொடர்பையும் சந்திப்புக்களையும் தவிர்த்து வருகின்றனர்.

இங்குதான் மகாவலி எல் வலயத்தில் நடந்த சிங்களக் குடியேற்றம் பற்றி ஜனாதிபதி எதுவும் அறியாதவராக இருந்தார்.

மகாவலி எல் வலயத்தில் நடந்த சிங்களக் குடியேற்றம் பற்றிய தகவலை வடக்கு முதல மைச்சர் வெளிப்படுத்தியபோது, 

அப்படி  எதுவும் நடக்கவில்லை என்பதாக ஜனாதிபதியின் அறிவிப்பு இருந்தது. அந்த அறி விப்பை மறுதலித்த முதலமைச்சர் விக்னேஸ் வரன் அவர்கள்; குடியேற்றம் நடந்ததற்கான ஆதாரம் எம்மிடம் உள்ளது என்று கூறியபோது,

விசாரிப்பினூடாக, மகாவலி எல் வலயத்தில் சிங்களக் குடியேற்றம் நடந்ததாக உறுதிப்படுத்திய ஜனாதிபதி அந்த விடயத்தை ஏற்றுக் கொண்டார்.

ஜனாதிபதிக்குத் தெரியாமல் சிங்களக் குடி யேற்றம் நடந்தது என்றால், அதனைச் செய் தது யார்? என்ற கேள்வி எழும்போது, அதற்கான பதிலை கூட்டமைப்பினரே கண்டறிய வேண்டும்.

எதுவாயினும் நல்லாட்சி என்பதற்காக அரசு எதைச் செய்தாலும் அதற்கு எதிர்வினை காட்டாமல் இருத்தல் என்பது வடிவேலுவின் அந்த நகைச்சுவை போன்றதாகவே இருக்கும்
« PREV
NEXT »

Facebook Comments APPID