BREAKING NEWS
latest

Friday, October 5, 2018

யுத்தத்தில் மாய்ந்தான் என நினைத்த மகன் உயிருடன் உள்ளான் தாய் ஒருவர் நெகிழ்ச்சி

2009ஆம் ஆண்டு இறுதியுத் தத்தின்போது தலையில் படுகாய மடைந்த எனது மகன் இறந்து விட்டார் என்றுதான் நினைத்தேன். ஆனால் பல நாட்களின் பின்னர் இராணுவத்தினர் உயிரோடு திருப் பித்தந்துள்ளனர் என்று முள்ளி வாய்க்காலில் தாய் ஒருவர் தெரி வித்துள்ளார்.

யுத்தப்பாதிப்புக்குள்ளாகிய மக் களின் தற்போதை நிலை தொடர் பில் கருத்து தெரிவிக்கும் போதே நெகிழ்ச்சியுடன் 

இதை தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவி க்கையில்.
 
2009 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி நந்திக்கடல் தெற்கு பகுதியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் இரு ந்து தமது பிரதேசத்திற்குள் எங்களை வரும் படி சைகைமூலம் காட்டினார்கள்.
அப்பொழுது நாங்கள் நின்றுகொண்டி ருந்த பகுதி விடுதலைப் புலிகளுக்கும் இரா ணுவத்தினருக்கும் இடைப்பட்டபகுதி.

இந்த நிலையில் ஏற்கெனவே படுகாய மடைந்திருந்த எனது கணவரையும் இளைய மகனையும் அழைத்துக்கொண்டு எனது மூத்தமகனுடன் நந்திக்கடலூடாக இராணு வக்கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தோம். 

அப்பொழுது வட்டுவாகல் பகுதியில் இரு ந்தும் நாங்கள் சென்று கொண்டிருந்த பகுதி யில் இருந்தும் யுத்த தாக்குதல் மேற்கொள்ள ப்பட்டது. இதன்போது எனது மூத்த மகனுக்கு தலையில் துப்பாக்கிரவை பாய்ந்தது எனது இளையமகனும் மீண்டும் படுகாயமடைந் தார். இருவரும் நந்திக்கடலில் விழுந்தனர்.

எனது கணவரும் படுகாயமடைந்திருந்த தால் என்னால் மூத்தமகனை மட்டும் கரை சேர்க்க முடிந்தது. ஆனாலும் மூத்த மகனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் அதி கமான குருதிபெருக்கெடுத்து ஓடிக்கொண்டி ருந்தது.
இந்த நிலையில் மூத்தமகனை தொடர் ந்து தூக்கி செல்ல முடியாதவாறு தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

என் ஆண் பிள்ளைகள் இருவரும் இற ந்து விட்டார்கள்? ஆனாலும் நானும் படுகாய மடைந்த எனது கணவரும் அவ்விடத்தில் இருந்து இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசத்தி ற்குள் செல்லமுடியாதவாறு தவித்தோம். அப் பொழுது இராணுவத்தினர் எம்மை மீட்ட னர்.
எமது ஆண் பிள்ளைகள் இருவரும் இற ந்துவிட்டார்கள் என்ற கவலையில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தோம்.

பின்னர் பல நாட்கள் சென்ற நிலையில் எனது மூத்தமகனை இராணுவத்தினர் உயி ரோடு ஒப்படைத்துள்ளனர். 
ஆனாலும் உயிரோடு திரும்பிய மகன் தற்பொழுதுவரை உடல் நலக்குறைவாகவே வாழ்ந்து வருகின்றார்  எனினும் இறந்ததாக எண்ணிய எனது மகன் திரும்பி வந்ததில் தாம் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்
« PREV
NEXT »

Facebook Comments APPID