BREAKING NEWS
latest

Monday, October 29, 2018

188 பேருடன் சென்ற லயன்ஏர் விமானம் கடலில் விழுந்து விபத்து!


இந்தோனேசியாவில் பயணிகள் உள்பட 188 பேருடன் சென்ற உள்நாட்டு விமானம், சுமத்ரா கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இருந்து இன்று காலை 6.20 மணியளவில் பயணிகள் உள்பட 188 பேருடன் பங்கல் பினாங்க் பகுதிக்கு லயன் ஏர் நிறுவனத்தின் விமானம் சென்றது.

லயன் ஏர் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் 8 என்ற ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம் புறப்பட்ட 13வது நிமிடத்தில், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

7.20 மணிக்கு பங்கல் பினாங்க் பகுதிக்கு சென்றிருக்க வேண்டிய நிலையில், ஏழரை மணியை கடந்தும் விமானம் இலக்கை அடையாததால், அதிகாரிகள் தேடுதல் வேட்டையை தொடங்கினர். இந்நிலையில், சுமத்ரா கடல் பகுதியில் விமானம் நொறுங்கியது தெரியவந்துள்ளதாக கூறியுள்ள அதிகாரிகள், விமான பாகங்கள் கடலில் மிதப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், விமானத்தில் 188 பேர் பயணித்திருந்தாலும், உயிரிழப்புகள் உறுதியாக தெரியவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

« PREV
NEXT »

Facebook Comments APPID