BREAKING NEWS
latest

Tuesday, September 18, 2018

வவுனியா கூட்டறவு பயிற்சி கல்லூரி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்

வவுனியா கூட்டறவு பயிற்சி கல்லூரி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது.
---------------------------------------
வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கூட்டறவுபயிற்சி கல்லூரியினை இராணுவத்திடம் இருந்து பெற்றுகொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் 
அனந்திசசிதரன் மற்றும் வவுனியா மாவட்டசெயலர் தலைமையில் வவுனியாவில் இடம்பெற்றது. இவ் விசேட கலந்துரையாடலில் புனர்வாழ்வு அமைச்சின் கீழ் இயங்கி வரும் இராணுவ கட்டளை தளபதி மற்றும் கூட்டறவு அமைச்சின் செயலாளர் கூட்டறவு ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர். முதலில் இராணுவ அதிகாரி கருத்து தெரிவிக்கையில் இந்த பயிற்சி மண்டபத்தினை புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கு இங்கு தொழில் பயிற்சினை வழங்க திட்டமிட்டிருப்பதாக  குறிப்பிட்டார். அதற்க்கு கருத்து தெரிவிக்கையில் கூட்டறவு அமைச்சின் கீழ் இயங்கி வரும் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு பயிற்சியினை வழங்க கட்டிட வசதி இல்லாமையினாலும் வேறு கட்டடங்களை ஒப்பந்த அடிப்படையில் பெறுவதன் மூலம் வீண் பணவிரயம் ஏற்படுவதாகவும் தற்போதைய சூழ் நிலையில் கூட்டறவு அமைச்சில் போதிய பணவசதி இல்லாமையாலும் பயிற்சி கல்லூரியினை அமைச்சிற்க்கு மீள தரும்படி அமைச்சர் கோரியிருந்தார். நீண்ட நேர கலந்துரையாடலின் பின்னர் பயிற்சி கல்லூரியில் இருக்கின்ற 2கட்டடங்களை அமைச்சிற்க்கு கையளிப்பாதாக இராணுவ அதிகாரி குறிப்பிட்டிருந்தார் அமைச்சர் அனந்தி சசிதரனின் துரித நடவெடிக்கை மூலம் இக் கட்டடம் பொதுமக்களின் பாவனைக்கு பயன்படவுள்ளமை குறிப்பிடதக்கது

« PREV
NEXT »

Facebook Comments APPID