BREAKING NEWS
latest

Monday, August 6, 2018

அச்சுவேலியில் அட்டகாசம் செய்த இளைஞர் குழு

வடதமிழீழம், உந்­து­ரு­ளி­யில் பய­ணித்த இளை­ஞர் குழு­வின் அட்­ட­கா­சத்­தால் இடைக்­காடு மற்­றும் பத்­த­மே­னிப் பகுதி மக்­கள் அச்­சத்­தில் உறைந்­துள்­ள­னர். இடைக்­காடு கலை­ம­கள் சன­ச­மூக நிலை­யம், அத­னோடு இணைந்­துள்ள தாய் சேய் நிலை­யம், 4 வீடு­க­ளின் கேற்­கள் என்­ப­வற்­றின் மீது தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ளார்­கள்.
கோப்புப்படம் 
இந்­தச் சம்­ப­வம் நேற்­று­முன்­தி­னம் சனிக்­கி­ழமை இரவு 9 மணிக்­கும் 10 மணிக்­கும் இடை­யில் இடம்­பெற்­றுள்­ள­தா­கப் காவல்தறையினர் தெரி­வித்­த­னர்.
இடைக்­காடு கலை­ம­கள் சன­ச­மூக நிலை­யம் மற்­றும் அதோடு இணைந்த நிலை­யில் உள்ள தாய் சேய் நிலைய யன்­னல்­க­ளின் கண்­ணா­டி­கள் அடித்து நொருக்­கப்­பட்­டுள்­ளது. 70 ஆயி­ரம் ரூபா வரை­யி­லான சேதம் ஏற்­பட்­டி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கின்­றது.
அச்­சு­வேலி – சந்­நிதி வீதி­யில் பத்­த­மே­னி­யில் உள்ள வலி.கிழக்­குப் பிர­தேச சபை உறுப்­பி­ன­ரும், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் பணி­யாள் தொகு­தி­யைச் சேர்ந்­த­வ­ரு­மான நா.இரா­சேந்­தி­ர­னின் வீட்டு முன்­பக்­கக் கேற்­றின் தக­ரங்­கள் கூரிய ஆயு­தத்­தால் வெட்­டப்­பட்­டும் தக­ரத்தை முறித்­தும் இளை­ஞர்­குழு சேதப்­ப­டுத்­தி­யுள்­ளது.
பத்­த­மே­னி­யில் தீத்­தாங்­கு­ளம் பிள்­ளை­யார் கோயில் பூச­க­ரின் வீட்­டுக் கேற்­றி­லும் தாக்­கு­தல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. மேலும் இரண்டு வீடு­க­ளின் கேற்­றுக்­க­ளும் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளது.
அச்­சு­வேலி – சந்­நிதி வீதி­யில் உள்ள வெளி­நாட்­டில் வசிக்­கும் ஆசி­ரியை ஒரு­வ­ரின் வீட்­டுக் கேற் மீதும் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ளது.
உந்­து­ரு­ளி­யில் திரிந்த இளை­ஞர்­க­ளின் விச­மச் செய­லால் பொது­மக்­கள் மத்­தி­யில் பதட்­டம் நில­வு­வதை அவ­தா­னிக்­கக் கூடி­ய­தாக உள்­ளது. பொது மக்­கள் பல­ரும் திகில் அடைந்த நிலை­யில் இருப்­ப­தா­கக் கூறி­னர்.
மேற்­படி சம்­ப­வங்­கள் தொடர்­பாக இடைக்­காடு கலை­ம­கள் சன­ச­மூக நிலைய நிர்­வா­கி­கள் மற்­றும் பாதிக்­கப்­பட்ட வீட்­டின் உரி­மை­யா­ளர்­கள் தனித் தனி­யாக அச்­சு­வே­லிப் காவல்தறையில் முறைப்­பாடு செய்­துள்­ள­னர்.
அச்­சு­வே­லிப் காவல்தறையினர் சந்­தே­க­ந­பர் ஒரு­வ­ரைக் கைது செய்­தி­ருப்­ப­தா­க­வும் விசா­ர­ணை­களை தொடர்ந்து முன்­னெ­டுத்­துள்­ள­தா­க­வும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது
« PREV
NEXT »

Facebook Comments APPID