BREAKING NEWS
latest

Tuesday, August 7, 2018

மின்சார சபையின் பணிப்பாளர் சபை இன்று கோப் குழுவிற்கு


இலங்கை மின்சார சபை பணிப்பாளர் சபை மற்றும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி எமது செய்திச் சேவைக்கு இதனை தெரிவித்தார்.

மின்சார சபையின் தலைவர், பொது முகாமையாளர் மற்றும் பிரதிப் பொது முகாமையாளர் உள்ளிட்டவர்களை கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவரும் கோப் குழுவில் பிரச்சன்னமாகவுள்ளார்.

எஸ் பவர் என்ற தனியார் நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் கெரவலபிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தில் இருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அவர்களிடம் இதன்போது விசாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
« PREV
NEXT »

Facebook Comments APPID