BREAKING NEWS
latest

Tuesday, August 7, 2018

வாள்வெட்டு குழு உறுப்பினர்களின் புகைப்படங்கள் கிடைத்தும் அவர்களை கைதுசெய்ய முடிவில்லையா

யாழ்.மாவட்டத்தில் வாள்வெட்டில் ஈடுபடும் குழு ஒன்று  25ற்கும் மேற்பட்ட படகுகளை வாடகைக்கு எடுத்து க்கொண்டு மருதங்கேணி,வடமராட்சி  கடலுக்குள் செல்வது தெரியவில்லை. வாள்வெட்டு குழுவின் புகைப்படங்களும் கிடைக்கி றது.

ஆனால் அவர்களை கைது செய்ய முடிவில்லை யா? மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியிருக்கும் வடமாகா ணசபை உறுப்பினர் கே.சயந்தன், பாடசாலை மாண வர்கள் பலிக்கடா ஆக்கப்படுவதாகவும் கூறினார்.

 யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சி வில்பாதுகாப்பு குழு கூட்டத்திலேயே மாகாணசபை உறுப்பினர் சயந்தன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், வாள்வெட்டு குழுக்கள் பாடசாலை மா ணவர்களை இலக்கு வைக்கிறது. அதிகளவான பாடசாலை மாணவர்கள் பலிக்கடா ஆக்கப்படுகிறார்கள்.

தென்மராட்ச்சி பகுதியில் தச்சன்தோப்பு கைதடி நாவற்குழி பகுதியில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்களது படம் கிடைத்தும் அவர்களை பொலிஸார் கைது செய்ய நடவெடிக்கை எடுக்வில்லை
.

அண்மை காலத்தில் ஆவா குழு உறுப்பினர்களது பிறந்தநாள் கொண்டாட்டம் அரியாலை கைதடி போன்ற இடங்களில் இடம்பெற்று அவர்கள் சமூக வலை தளங்களில் படங்களை பதிவு செய்தபோதும் அவர்களை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்யவில்லை ஆனால் அ வர்களை கைது செய்ய முடியவில்லை என்றால் என்ன பயன் என சயந்தன் மேலும் கேள்வி எழுப்பி உள்ளார்.
« PREV
NEXT »

Facebook Comments APPID