BREAKING NEWS
latest

Wednesday, August 8, 2018

அண்ணாவுக்கு வலது புறத்தில் கருணாநிதி... மெரினாவில் ஏற்பாடுகள் தீவிரம்!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்வதற்குசென்னைமெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா சமாதியின் வலது புறத்தில் இடம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.



மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலடக்கத்தை மெரினா கடற்கரையில்அண்ணா சமாதிக்கு அருகில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று திமுக தரப்பில்கோரப்பட்டது.



ஆனால்இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்ததுஅதையடுத்து திமுக சார்பில்தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்அண்ணா சமாதிக்குஅருகிலேயே கருணாநிதியின் உடலடக்கம் செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றுதீர்ப்பு அளித்துள்ளது.


அதையடுத்து மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் கருணாநிதியின் உடலடக்கம்செய்வதற்கான இடங்களைத் தேர்வு செய்யும் பணியில் பொதுப்பணித் துறையினர்ஈடுபட்டனர்திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் இந்த ஆய்வில்பங்கேற்றார்.


அதில் அண்ணா சமாதிக்கு வலதுபுறம் உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதுஅதையடுத்துஇந்தப் பகுதிஅதிரடிப் படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுஅதையடுத்துஉடலடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன
« PREV
NEXT »

Facebook Comments APPID