BREAKING NEWS
latest

Monday, August 13, 2018

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு மேலதிக பொலிஸ்- அனந்தி ஏற்பாடு!


கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதாவது10.8.2018 திகதி அன்று முதலமைச்சர்,அமைச்சர்கள்,சிரேஸ்டபிரதிபொலிஸ்மாஅதிபர்,பொலிஸ்மாஅதிபர் மற்றும் யாழ்பாணபிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலைய நிலையபொறுப்பதிகாரிகளுக்கான கலந்துரையாடல் ஒன்று மாகாணசபையில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் வட்டுக்கோட்டைபொலிஸ் பிரிவில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பாக விவாதித்தபோது அப்போது பேசிய அமைச்சர் அனந்தி சசிதரன் பொலிஸ்நிலையத்தில் உள்ளபௌதீகவள குறைபாடு மற்றும் ஆளனி பற்றாக்குறை தொடர்பாக சிரேஸ்டபொலிஸுமா அதிபருக்கு எடுத்து விளக்கினார்.

அதனை ஏற்றுக்கொண்ட சிரேஸ்டபொலிஸ்மா அதிபர் நேற்றிலிருந்து 15 உத்தியோகத்தர்களை வட்டுக்கோட்டைக்குபொலிஸ் நிலையத்திற்க்கு கடமைக்கு நியமித்துள்ளார்.

அமைச்சர் தான் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக துரித நடவெடிக்கை எடுத்தமைக்கு மக்கள் சார்பாகவும் மக்கள் பிரதிநிதி சார்பாக நன்றி தெரிவித்துள்ளார்.

« PREV
NEXT »

Facebook Comments APPID