BREAKING NEWS
latest

Friday, August 3, 2018

இரண்டாம் தவணைக்கான விடுமுறை இன்று


அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதியின் கீழ் இயங்கும் பாடசாலைகளது இரண்டாம் தவணைக்கான விடுமுறை இன்று வழங்கப்படவுள்ளது.
இந்தநிலையில் மூன்றாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளது இரண்டாம் தவணைக்கான விடுமுறை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
மூன்றாம் தவணைக்காக அந்த பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.
இதேவேளை, ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
இதற்காக மூன்று லட்சத்து 55 ஆயிரத்து 326 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
« PREV
NEXT »

Facebook Comments APPID