BREAKING NEWS
latest

Wednesday, August 15, 2018

தமிழ் மீனவர்களின் வாடிகளிற்கு தீ வைத்தமையினால் 35 லட்சம் ரூபா நட்டம்

முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு தமிழ் மீனவர்களின் வாடிகளிற்கு தீ வைத்தமையினால் 35 லட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச செயலகம் மாவட்டச் செயலகம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களிற்கு அறிக்கையிட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் நாயாறுப் பகுதியில் தமிழ் மக்களின் வாடிகளிற்கு சிங்கள மீனவர்கள் எனச் சந்தேகிப்பவர்களால் வேண்டுமென்றே தீ வைக்கப்பட்ட சம்பவத்தினால் 8 வாடிகள் முற்றாக அழிவடைந்த நிலையில் 9 குடும்பங்களும் நிர்கதியாகியுள்ளதாகவும் இவ்வாறு பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களின் தொழில் உபகரணங்கள் மற்றும் அடிப்படை உபகரணங்கள் என அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
இந்த அசம்பாவித்த்தினால் 10 குடும்பம் நேரடியாக பாதிப்படைந்து நடுவீதியில் நிற்கின்றது. இதேநேரம் இதன் அச்சம் மற்றும் எதிர்கால நிலமை கருதி சுமார் 50 மீனவர்கள் தொழிலிற்கு செல்லவில்லை. இவற்றின் பால் உடமையை இழந்த குடும்பங்களிற்கு இழப்பீட்டிற்கு அப்பால் இப் பிரச்சணைக்கு நிரந்தர தீர்வும் , இனிமேல் இடம்பெறாது என்ற உத்தரவாதமும் வேண்டும்.்என மீனவ சங்கப்பிரதி நிதி தெரிவித்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் நேற்று அதிகாலை 5 மணிக்கு சம்பவ இடத்திற்குச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டு சேதவிபரங்களை கேட்டறிந்த்தோடு பொலிசாருடன் தொடர்புபொண்டு சந்தேக நபர்களை பிடிக்காதமைக்கான ஆட்சேபனையினையும் தெரிவித்து குறித்த சம்பவம் இதேபோன்று சிங்கள மீனவர்களின் வாடிகள் எரிந்திருந்தாள் எத்தனை தமிழர்கள் இந்த நேர இடைவெளியில் சிறையில் தள்ளப்பட்டிருப்பார்கள். ஆனால் சம்பவம் இடம்பெற்று 14 மணி நேரம் கழித்தும் ஒருவரும் கைது செய்யப்படவில்லை.
இதேநேரம் குறித்த பகுதியில் ஓர் பாரிய அணர்த்தம் இடம்பெற்று மக்கள் கொதி நிலையிலும் ஏக்கத்திலும் உள்ளனர். ஆரம்ப விசாரணைகளே ஆரம்பிக்காத நிலையில் இப் பகுதியில். வெறுமனே இரண்டு பொலிசார் மட்டும் கடமைக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் நிறுத்தப்பட்ட இடமும் மேலும் சந்தேகத்தை எழுப்புகின்றது. அதேநேரம் பாதிக்கப்பட மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழில் முயற்சிக்காக உடன் உதவுமாறு அமைச்சர் மனோ கணேசனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கமைய அமைச்சர் விபரத்தை கோரியுள்ளார்.
குறித்த விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்டதும் உதவி கிட்டும் என எதிர்பார்க்கின்றோம். இருப்பினும் மீனவர்களின் உடனடி வாழ்வியல் தொடர்பில் ஆராயப்படுகின்றது. என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இதேநேரம் குறித்த அசம்பாவிதம் தொடர்பில் விபரங்கள் திரட்டப்பட்டு இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலும் தொடர்புடைய அனைவரிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இப் பகுதியில் இடம்பெறும் தொடர் அசாதாரண நிலமை தொடர்பில் இறுதி தீர்வு எட்டப்படவில்லை. அதனை தொடர்பு பட்ட அமைச்ணுக்களே மேற்கொள்ள வேண்டும். என மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். -
« PREV
NEXT »

Facebook Comments APPID