BREAKING NEWS
latest

Tuesday, August 21, 2018

10 நாட்களின் பின்னர் மீண்டும் மன்னார் புதைகுழி தோண்டும் பணிகள் ஆரம்பம்!


மன்னார் 'சதொச' வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் நேற்றுக் காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலையுடன் மனித எலும்புகள் அகழ்வு பணிகள் இடை நிறுத்தப்பட்டது.

 இந்த நிலையில் மீண்டும் நேற்றுக் காலை 7.30 மணியளவில் 53 ஆவது நாளாக அகழ்வு பணிகள் இடம்பெற்றது.

 தற்போது வரை 66 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவற்றில் 56 மனித எலும்புக்கூடுகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.

விசேட சட்ட வைத்திய அதிகாரி ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் குறித்த அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

Facebook Comments APPID