BREAKING NEWS
latest

Friday, July 20, 2018

மாகாண சபை உறுப்பினரால் பெண் அமைச்சருக்கு உயிர் அச்சுறுத்தல்!



வட  மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் அவர்களினால் வடமாகாணசபை மகளிர்  விவகார அமைச்சர் அனந்தி  சசிதரன் அவர்களுக்கு  உயிர் அச்சுறுத்தல்  ,மற்றும்  அவமானம்  ஏற்படுத்தும்  நோக்கில் "துப்பாக்கி வைத்திருக்கிறார் அனந்தி"என கடந்த மாகாண சபை  அமர்வில் மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் உரையாற்றியமை தொடர்பாக அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் நேற்றைய தினம் சாவகச்சேரி பொலிஸ்  நிலையத்தில்  முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளது

இது தொடர்பாக  எமது செய்தி பிரிவை சேர்ந்த ஊடகவியலாளர் இன்று காலையில் அஸ்மின் அவர்களுடன்   தொலைபேசி தொடர்பினை ஏற்படுத்த முயன்ற வேளை   அவரின் தொலைபேசி  அணைக்கப்பட்டு  இருந்தது


 மேலும் எமது  செய்தி பிரிவிற்கு கிடைத்த   தகவலின்   படி இன்று    மாலை  இருவரையும்  நான்கு  மணியளவில் சாவகச்சேரி பொலிஸ்   நிலையத்திற்கு  சமூகமளிக்குமாறு அழைப்பு   விடுக்கப்பட்டிருப்பதாகவும் நம்பத்தகுந்த வடடாரங்கள் தெரிவிக்கின்றன 
« PREV
NEXT »

Facebook Comments APPID