BREAKING NEWS
latest

Tuesday, July 24, 2018

இலங்கையில் ஈவிரக்கமற்ற மோசமான சித்திரவதைகள்! - ஐ.நா நிபுணர்

இலங்கையில் சித்திரவதை பரவலாக நடைமுறையில் உள்ளதாகவும், அரசாங்கம் முன்னெடுப்பதாக வாக்குறுதியளித்த சீர்திருத்த நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும்- பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த ஐ.நா விசேட அறிக்கையாளர் பென் எமர்சன் இலங்கைக்கான தனது பயணம் தொடர்பாக சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“இலங்கை தனது நிலைமாறுக்கால நீதி குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் எவையும் உண்மையான முன்னேற்றத்தை அடைவதற்கு போதுமானவையாக காணப்படவில்லை. நல்லிணக்கம் மற்றும் நீதியான நீதித்துறை குறித்த சீர்திருத்தங்கள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. சித்திரவதைகளை பரவலாக பயன்படுத்துபவர்கள் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரம் தொடர்கின்றது.

பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாக எண்ணிக்கை குறிப்பிடமுடியாத அளவிலானவர்களிற்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. நான் மிக மோசமான ஈவிரக்கமற்ற சித்திரவதைகள் குறித்து என்னுடைய பயணத்தின் போது அறிந்து கொண்டேன்.

தடியால் அடித்தல், பெட்ரோல் நிரம்பிய பிளாஸ்டிக் பையினால் முகத்தை மூடி மூச்சுத் திணறச் செய்தல், நகங்களை பிடுங்குதல், ஊசியால் நகத்தில் குத்துதல் போன்ற சித்திரவதைகள் நடைமுறையில் உள்ளதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

Facebook Comments APPID