BREAKING NEWS
latest

Sunday, July 8, 2018

சம்பூர் பெருநிலப்பரப்பில் இரத்ததாலும் தசையாலும் எழுதப்பட்ட அப்பாவி தமிழின படுகொலை நாள்

சம்பூர் பெருநிலப்பரப்பில் இரத்ததாலும் தசையாலும் எழுதப்பட்ட அப்பாவி தமிழின படுகொலை நாள் 07.07.1990.

சம்பூர் பெருநிலப்பரப்பு வளமிகு காடுகளாலும் அறுபத்திற்கும் மேற்பட்ட நீர் நிறை குளங்களாலும், மீன் விளையும் ஆழமற்ற கடலாலும் சூழப்பட்ட செழித்து வளம் கொழிக்கும் கிராமம்.
இக்கிராமம் பல கிராமங்களின் தாய்நிலமாகும். இது தனித்தமிழர்கள் வாழும் பகுதி என்பதால், 1986, 1990 களில் ஏற்பட்ட இனவன்செயலில் இருந்து தம்மை பாதுகாக்க பல கிராம மக்கள் பல்வேறு நலன்புரி நிலையங்களில் தஞ்சம் புகுந்து வாழ்ந்தனர்.

இவ்வாறான காலப்பகுதியிலேயே சிங்கள இராணுவமும், அதனோடு சேர்ந்து இயங்கிய முஸ்லிம் குழுக்களும் இணைந்தே தமிழர் தேசமெங்கும் படுகொலையை அரங்கேற்றி வந்தனர். அதேபோலே சம்பூர் பெருநிலப்பரப்பிலும் மிக கொடிய படுகொலை அரங்கேறியது.
சம்பூர் படுகொலையானது, தமிழரை பழிவாங்கும் படலமாக கொள்ளப்பட்டதே அன்றி வேறில்லை. இதற்கமைவாக சம்பூர் பெருநிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களாவன
1. இராசேந்திரம் பத்மநாதன் ( உயர் தர மாணவன்)
2. பொன்னம்பலம் சச்சிதானந்தகுரு(தரம் 7 மாணவன்)
3. புண்ணியமூர்த்தி செல்லக்குட்டி ( அதிபர்)
4. மயில்வாகனம் பிரேமாநந்தராஜா( உயர்தர மாணவன்)
5.கோணலிங்கம் சோமேஸ்வரன் (தரம் 7 மாணவன்)
6.கனகசிங்கம் நித்தியசீலன் ( தரம் 7 மாணவன்)
7.ச.கனகசிங்கம்
9.கனககசூரியம் சண்முகராஜா - ரவி (தரம் 10 மாணவன்)
10.ஒப்பிலாமணி இந்திரன்
11.முத்துக்குமார் விஜயகுமார்(தரம் 10 மாணவன்)
12. முத்துக்குமார் விஐயநாதன்.
13. வைரமுத்து வெற்றிவேல்
14.சங்கரலிங்கம் உதயமோகன்
15.தங்கராஜா தவராசா( பப்பாசி)
16.பேச்சிமுத்து அருமைப்பிள்ளை (பொலிஸ் உத்தியோகத்தர்)
17.சொக்கன்
18.திருமதி கணபதி
19.காளிகோவில் பூசகர் (மட்டக்களப்பை சேர்ந்தவர்)
20. இராசேந்திரம் (கூனித்தீவு)
21. இராசேந்திரம் வாமதேவன் ( தரம் 10 மாணவன்)
22. வேலுப்பிள்ளை வைரமுத்து (கடற்கரைச்சேனை)
23. வைரமுத்து அளகம்மா (கடற்கரைச்சேனை)
24. அல்லிராசா( சூடைக்குடா)
25. அல்லிராசா மகன் 1( சூடைக்குடா)
26. அல்லிராசா மகன் 2 ( சூடைக்குடா)
27. சுப்பிரமணியம் விநாயகநேசன்(கூனித்தீவு)
28. கணபதிப்பிள்ளை செல்வராஜா (ஓபெ. பொலிஸ் கூனித்தீவு)
29. வைரமுத்து சுப்பிரமணியம் (கூனித்தீவு)
30. பேச்சிமுத்து (பரியாரியர்)
31. வீ.அரசமணி.
32. இ.ரவிநேசன்.
33. இ.சிவனேசன்.
34. சி.சிங்கராசா.
35. சி.கோணலிங்கம்.
36. இ.யெகதீஸ்வரன்
37. கணபதி கான சரஸ்வதி
38.சி.கவிரூபன்.
39. கோ.நரவரெத்தினம்.
40. ந அருனாசலம்
41. க யோகநாதன்
« PREV
NEXT »

Facebook Comments APPID