BREAKING NEWS
latest

Monday, July 2, 2018

நிரவ் மோடிக்கு இன்டர்போல் அமைப்பு ரெட் கார்னர் நோட்டீஸ்

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்தது கடந்த சில மாதங்களுக்கு முன் தெரியவந்தது. இந்த மோசடி புகார் வெளிச்சத்துக்கு வந்ததும், இருவரும் இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டனர். 

நிரவ் மோடியை பிடிக்க உதவி செய்யுமாறு, பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்தியா கடிதம் அனுப்பி உள்ளது.  நிரவ் மோடி குறித்து தகவல் தெரிந்தால் இந்தியாவிற்கு தெரிவிக்கும்படி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் சார்பில்  தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நிரவ் மோடிக்கு எதிராக சர்வதேச விசாரணை அமைப்பான, இன்டர்போல் அமைப்பு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

« PREV
NEXT »

Facebook Comments APPID