BREAKING NEWS
latest

Tuesday, July 10, 2018

ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவின் மாநகரசபை ஊழலை விளம்பரப்படுத்திய முதலமைச்சர்!

வடதமிழீழம், யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட கஸ்தூரியார் வீதி மாடிக்கடைத் தொகுதி அமைக்கப்பட்ட கட்டடத்தில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பாக முதலமைச்சரால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை முதலமைச்சர் இன்று பத்திரிகை விளம்பரங்கள் வாயிலாக பகிரங்கப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஆராய்ந்த குழுவானது பின்வரும் முக்கியமான பரிந்துரைகளை மேற்கொண்டுள்ளது.
1.மேற்கொள்ளப்பட்ட பெறுகைகளின் நடைமுறைகள், வரைபடங்களின் அங்கீகாரம், கட்டிட வேலை மதிப்பீடு, கணியப்பட்டியல், கட்டிட அமைப்பு, மற்றும் ஒப்பந்தம் ஆகியவை மாநகரசபைகள் கட்டளைச்சட்டத்திற்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்ட விதிகளிற்கும் முரணாக உள்ளதால் SMT Developers (PVT) limited நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முடிவுறுத்தி, குறித்த கட்டட தொகுதியை முழுமையாக பொறுப்பேற்பதற்கு நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும். வரைபடத்தின் பிரகாரம் நிறைவேற்றப்படாது இருக்கும் வேலைகளை, வழங்கப்படாது இருக்கும் கடைகளை ஒரே தடவையில் கோரி பெற்றுக்கொள்ளும் பணத்தை பெற்று வழங்குவதன் மூலம் (Premium) கிடைக்கும் நிதியை கொண்டு பூர்த்தி செய்யப்படுவதற்கும், அதில் மிகுதி இருப்பின் அதனை SMT Developers (PVT) limited நிறுவனத்திற்கு வழங்குவதற்குமான ஏற்பாட்டை நீதிமன்ற கட்டளை மூலம் பெறுவதற்கு சட்ட நடவடிக்கையில் உள்ளடக்கப்படல் வேண்டும்.
2.மாநகரசபைகள் கட்டளை சட்டத்தின் பிரிவு 32 இற்கு முரணாக சட்ட வலுவற்ற அதிகாரக் கையளிப்பைப் பெற்று அதனடிப்படையில் எடுத்த சகல நடவடிக்கைகளுக்கும் அப்போதைய முதல்வரே பொறுப்பாளியாவதால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
அத்துடன் தவறான அதிகார கையளிப்பை (Delegation) வழங்கிய உறுப்பினர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், அவ்வாறே பிழையான நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்த உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
௩.இனிமேல் வாடகை ஒப்பந்தம் செய்யப்படும் போது குத்தகைக்காலம் ஐந்து வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்டு, ஐந்து வருடங்களின் பின்னர் வாடகை மீள் மதிப்பீட்டுடன் புதுப்பிக்கப்படல் வேண்டும். வாடகை ஒப்பந்தம் கடையின் உரிமையாளரின் கோரிக்கையின் பேரில் வாரிசுகள் அல்லாதவர்களிற்கு பெயர் மாற்றி கொடுப்பதற்காக 20 வருட வாடகையுடன் சபை மாற்றிக் கொடுப்பதற்கான அறிவுறுத்தலை மாகாண உள்ளூராட்சி அமைச்சர் மாநகரசபைக்கு வழங்க வேண்டும். உரிமை மாற்றம் செய்யப்படும்போது வாடகை தொகை மதிப்பீடு குறித்த காலப்பகுதியில் செய்திருத்தல் வேண்டும்.
4.பொறியிலாளரின் 18.05.2018ம் திகதிய அறிக்கையின்படி வாடகை ஒப்பந்தம் இல்லாமலும் வாடகை செலுத்தாமலும் 3ம் மாடியில் சிலர் குடியிருப்பாளர் தொழில் நடத்துகிறார்கள். (ஈ.பி.டி.பியின் தொலைக்காட்சி நிலையத்தை குறிக்கிறது) மேற்படி குடியிருப்பாளர்களிடம் இருந்து நிலுவையுடன் கூடிய வாடகை அறவிட உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
௫.மாநகரசபை குறித்த SMT Developers (PVT) limited நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட 31.01.2011ம் திகதிய ஒப்பந்தத்தின் பிரிவு (e) இன் பிரகாரம் ஒப்பந்தக்காரரினால் வாடகைக்கு விடப்படாத கடைகளிற்கான வாடகை தொகை ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
6.ஓய்வுநிலை நீதியரசர்களான திரு.க.அரியநாயகம், திரு.இ.வசந்தசேனன் ஆகியோரது அறிக்கைகளில் அவர்களால் குறிப்பிடப்பட்ட ஏனைய விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
« PREV
NEXT »

Facebook Comments APPID