BREAKING NEWS
latest

Tuesday, July 10, 2018

எத்தனை பேரை வடதமிழீழத்தில் கைது செய்யப்போகிறீர்கள்?

ஶ்ரீலங்கா,வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோருக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று காவல்துறை தலைமையகத்துக்கு தனித்தனி­யாக முறைப்­பா­டுகள் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன.
உண்­மையை கண்­ட­றியும் அமைப்பின் தேசிய அமைப்­பாளர் சட்­டத்­த­ரணி பிரே­மநாத் சி தொல­வத்த இந்த முறைப்­பா­டு­களை காவல்துறை மா அதிபர் அலு­வ­ல­கத்தில் நேற்று பதிவு செய்தார். அத்­துடன் வடக்கில் ஜூலை 5 ஆம் திகதி இடம்­பெற்ற கரும்­பு­லிகள் நினைவு நிகழ்­வுகள் தொடர்­பிலும் இதன்­போது மற்­றொரு முறைப்­பாடும் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.
தமி­ழீழ விடு­தலைப்புலி­களை ஆத­ரிக்கும் வகை­யிலும், அவர்­களை அங்­கீ­க­ரிக்கும் வண்­ணமும் சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்­களை தொடர்ந்து வெளி­யி­டு­வ­தா­கவும், தமி­ழீழ விடு­தலைப்புலி­களை மீண்டும் உரு­வாக்க வேண்டும் என்­பதே தமது முக்­கிய நோக்கம் என்றும் முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்த விட­யத்தை வர­வேற்று கருத்­துக்­களை வெளி­யிட்டு இனங்­க­ளுக்கு இடையில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்த முயற்­சிப்­ப­தாக கூறி இந்த முறைப்­பா­டுகள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.
அதில் குறிப்­பாக விஜ­ய­கலா மகேஸ்­வரன் எம்.பி. வெளி­நாடு செல்­ல­வுள்­ள­தாக ஊட­கங்கள் ஊடாக தெரி­ய­ வந்­துள்­ள­தா­கவும், அதற்கு முன்னர் அவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும், ஏற்­க­னவே அவர் தொடர்பில் தாம் செய்த முறைப்­பாடு தொடர்பில் அதற்­காக அவ­தானம் செலுத்­து­மாறும் சட்­டத்­த­ரணி பிரே­மநாத் சி தொல­வத்த தனது முறைப்­பாட்டில் கோரி­யுள்ளார்.
நேற்று பிற்­பகல் 2.45 அளவில் காவல்துறை தலை­மை­ய­கத்­துக்கு சென்ற சட்­டத்­த­ரணி தொல­வத்த தலை­மை­யிலான் குழு­வினர், முதலில் வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக முறை­யிட்­டனர். கடந்த 2018.07.05 ஆம் திகதி விக்­கி­னேஸ்­வரன் அறிக்­கை­யொன்­றினை விடுத்­துள்­ள­தா­கவும் அதில், புலிகள் காலத்தில் வடக்கில் மக்கள் பாது­காப்­பாக இருந்­த­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­தா­கவும், அத­னூ­டாக விஜ­ய­கலா மகேஸ்­வரன் ஏற்­க­னவே வெளி­யிட்ட கருத்­துக்­க­ளையும் அவர் ஆமோ­தித்­துள்­ள­தா­கவும் அம்­மு­றைப்­பாட்டில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
அதன்­படி அந்த நட­வ­டிக்­கை­யா­னது அர­சியல் யாப்பை மீறும் செயல் என சுட்­டிக்­காட்­டி­யுள்ள முறைப்­பாட்­டாளர், தண்­டனை சட்ட கோவையின் 114, 115 ஆம் அத்­தி­யாயங்­களின் கீழ் விக்­கி­னேஸ்­வரன் தண்­ட­னைக்­கு­ரிய குற்­றத்தை புரிந்­துள்­ள­தா­கவும், அவரின் கூற்­றா­னது 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் பிர­கா­ரமும் இனங்­க­ளுக்கு இடையே விரி­சலை ஏற்­ப­டுத்தும் தண்­டனைக்குரிய குற்­ற­மாகும் எனவும் உண்­மையை கண்­ட­றியும் அமைப்பின் தலைவர் சட்­டத்­த­ரணி பிரே­மநாத் சி தொல­வத்த முறைப்­பாட்டில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
2 ஆம் முறைப்­பாடு விஜ­ய­க­லா­ ம­கேஸ்­வரன் எம்.பி.க்கு எதி­ராக செய்­யப்­பட்­டுள்­ளது. அவர் கடந்த 2018.07.07. ஆம் திகதி யாழ். பிராந்­திய தொலைக்­காட்சி ஒன்­றுக்கு வழங்­கிய செவ்­வியை மையப்­ப­டுத்தி தனியார் தொலைக்­காட்­சிகள் இரண்டு ஒளி­ப­ரப்­பிய செய்­தியை ஆதாரம் காட்டி இந்த முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.
தனது மனதில் உள்ள உறுத்­தலை வெளிப்­ப­டுத்த தனக்கு உரிமை உள்­ள­தா­கவும், யார் விரும்­பி­னாலும் விரும்­பா­ விட்­டாலும் பிர­பா­கரன் தனது மண்ணை மீட்க போரா­டிய தலைவர் எனவும், ஹிட்­ல­ருடன் பிர­பா­க­ரனை ஒப்­பிட முடி­யாது எனவும் விஜ­ய­கலா மகேஸ்­வரன் கூறி­யுள்ளார். இதுவும் தண்­டனை சட்ட கோவையின் 114, 115 ஆம் அத்­தி­யாயங்­களின் கீழ் இவரும் தண்­ட­னைக்­கு­ரிய குற்­றத்தை புரிந்­துள்­ள­தா­கவும், அவரின் கூற்­றா­னது 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் பிர­கா­ரமும் இனங்­க­ளுக்கு இடையே விரி­சலை ஏற்­ப­டுத்தும் தண்­டனைக்குரிய குற்­ற­மாகும். என அம்­மு­றைப்­பாட்டில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
இந் நிலையில் வட­மா­காண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனும் விஜயகலா எம்.பி.யின் உரையை ஆமோதித்து வெளியிட்ட அறிக்கையை மையப்படுத்தி அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவற்றுக்கு புறம்பாகவே வடக்கில் கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்ற கரும்புலிகள் தின நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள், அதில் பங்கேற்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி முறையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

Facebook Comments APPID