BREAKING NEWS
latest

Monday, July 23, 2018

மறைமுக நிகழ்ச்சி நிரல்

வடக்கு, கிழக்கு பிர­தே­சங்கள் தமிழ் மக்­களின் பூர்­வீக வாழ்­வி­டங்­க­ளாகும்;. இதன் கார­ண­மா­கவே வடக்கும் ,கிழக்கும் தமி­ழர்­களின் தாயக மண் என்று உரிமை கொள்­ளப்­ப­டு­கின்­றது. இதன் அடிப்­ப­டை­யி­லேயே, வடக்கும் ,கிழக்கும் இணைந்த தாயக பிர­தே­சத்தில் சமஷ்டி முறை­யி­லான தன்­னாட்சி உரி­மைக்­கான கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. ஆனால் அந்த கோரிக்கை நிறை­வேற்­றப்­ப­டுமா என்­பது ஒரு­பு­ற­மி­ருக்க, அந்த பிர­தே­சங்­களில் தமிழ் மக்­களின் இருப்பே கேள்­விக்­கு­றிக்கு ஆளாகும் வகையில் நிலை­மைகள் மோச­ம­டைந்து செல்­வ­தையே காண முடி­கின்­றது.
வர­லாற்று வாழ்­வி­டங்­களில் தமது ஆட்சி உரி­மையை நிலை­ நி­றுத்தி கொள்­வ­தற்­கான தமிழ் மக்­களின் கோரிக்கை, நாடு அந்­நி­ய­ரி­ட­மி­ருந்து சுதந்­திரம் பெற்ற காலம் தொடக்கம், ஆட்­சி­யா­ளர்­க­ளி­னாலும், பேரி­ன­வ­ாதி­க­ளி­னாலும் ஏள­ன­மாக நோக்­கப்­பட்­டது. தமிழ் மக்­களின் சாத்­வீக வழி­மு­றை­யி­லான அந்த அர­சியல் கோரிக்­கையை அவர்கள் மலி­னப்­ப­டுத்­தி­னார்கள். போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­களை ஆயு­த­மு­னையில் அடக்கி ஒடுக்­கி­னார்கள். பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்­காக, கபட நோக்­கத்­துடன் பெய­ர­ளவில் தமிழ் தலை­வர்­க­ளுடன் சிங்­கள அர­சியல் தலை­வர்கள் செய்து கொண்ட ஒப்­பந்­தங்கள் கிழித்­தெ­றி­யப்­பட்­டன.இதன் கார­ண­மா­கவே தமிழ் இளை­ஞர்கள் ஆயு­த­மேந்தி போராட நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டார்கள்.
தமி­ழர்­களின் அர­சியல் உரி­மைக்­கான சாத்­வீக போராட்­டத்­திற்கு எந்த வகை­யிலும் குறை­யாத வகை­யி­லேயே ஆயுத போராட்­டமும் தீவி­ர­ம­டைந்­தி­ருந்­தது. சத்­தி­யாக்­கி­ரக போராட்­டமும், ஒத்­து­ழை­யாமை இயக்­கமும் தந்த நெருக்­க­டி­யிலும் பார்க்க, தமிழ் இளை­ஞர்­களின் ஆயுத போராட்டம் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு அதிக நெருக்­க­டியை கொடுத்­தது. குறிப்­பாக விடு­த­லைப்­பு­லி­களின் தீவி­ர­மான ஆயுத போராட்டத்தினால், தேசிய பாது­காப்பு மிக மோச­மா­கி­யது. அரச தலை­வர்கள், முக்­கிய அர­சி­யல் ­வா­தி­களின் பாது­காப்பு மிகுந்த அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளா­கி­யது. எந்த இடத்தில் எப்­போது தாக்­கு­தல்கள் நடத்­தப்­ப­டுமோ என்றும் குண்­டுகள் வெடிக்­குமோ என்றும், அச்­சத்தில் உறைந்­தி­ருக்க வேண்­டிய நிலை­மைக்கு அர­சாங்­கங்கள் அப்­போது ஆளா­கி­யி­ருந்­தன. அந்த சூழ்­நி­லையில் சமா­தா­ன­மான முறையில் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்­காக யுத்­த ­நி­றுத்தம் செய்து சர்­வ­தேச மத்­தி­யஸ்­தத்­துடன் முன்­னெ­டுக்­கப்­பட்ட பேச்­சு­வார்த்­தை­களும் அர்த்­த­மற்­ற­வை­யாக்­கப்­பட்­டன.
இதனால் ஆயுத போராட்டம் தீவி­ர­மாக தொடர்ந்­தது. அவ்­வாறு நீடித்த அர­சியல் உரி­மைக்­கான அந்த ஆயுத போராட்­டத்­தையே, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ்ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் சர்­வ­தேச பயங்­க­ர­வா­தத்­திற்கு ஈடான பயங்­க­ர­வா­த­மாக, உல­க­ளா­விய ரீதியில் சித்­த­ரித்து, சர்வ­தேச நாடு­களின் ஒத்­து­ழைப்­புடன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் விடு­த­லைப்­பு­லி­களை இரா­ணுவ ரீதி­யாக தோற்­க­டித்து யுத்­தத்தை முடி­வுக்கு கொண்டு வந்­தது.
பயங்­க­ர­வாதம் என்ற போர்­வையில் தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைக்­கான ஆயுத போராட்­டத்தை முடி­வுக்கு கொண்டு வந்த மஹிந்த ராஜ­பக் ஷ அரசு, அந்த போராட்­டத்­திற்கு, அடிப்­ப­டை­யான இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண்­ப­தற்கு இத­ய­சுத்­தி­யுடன் செயற்­ப­ட­வில்லை. இந்­திய அரசின் வற்­பு­றுத்­த­லை­ய­டுத்து, கண்­து­டைப்­புக்­காக தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்­புடன் பேச்சுக்­களை நடத்தி, எந்­த­வி­த­மான முடி­வு­க­ளையும் எட்­டாமல் தானா­கவே பேச்­சுக்­களில் இருந்து விலகிக் கொண்­டது.
இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­பதில் அக்­கறை காட்­டா­தது மட்­டு­மல்­லாமல், யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் வாழ்க்­கையை புன­ர­மைப்­ப­திலும், அவர்கள் எதிர்­கொண்­டி­ருந்த நாளாந்த பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­தி­லும்­ கூட முன்­னைய அரசு அக்­கறை காட்­ட­வில்லை. மாறாக மீள்­கு­டி­யேற்ற பிர­தே­சங்­களில் இரா­ணு­வத்தை நிரந்­த­ர­மாக நிறுத்தி, அந்த பிர­தே­சத்தை இரா­ணுவ மய­மாக்கி, மீள ­கு­டி­ய­மர்ந்த மக்­களை அச்­சத்தின் பிடி­யி­லேயே வைத்­தி­ருந்­தது.
அன்­றைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ சிங்­கள மக்கள் மத்­தியில் தனது வெற்­றி பி­ர­தா­பத்தை பிர­சாரம் செய்­ததை போலவே, யுத்­தத்தின் பின்னர், தமிழ் மக்­களின் மனங்­களை வென்­றெ­டுக்க போவ­தாக கூறிக்­கொண்டு, அவர்கள் மத்­தி­யிலும் தனக்கு சாத­க­மான அர­சியல் பிர­சா­ரங்­களை முடுக்கி விட்­டி­ருந்தார். பாரிய உயிர் ­தி­யா­கத்தின் மூலம், இரா­ணு­வத்­தினர், விடு­த­லைப்­பு­லி­களின் பிடியில் இருந்து தமிழ் மக்­களை மீட்­டெ­டுத்­துள்­ள­தாக கூறி, மீண்டும் ஒரு யுத்தம் ஏற்­பட்­டு­ விடப்போகின்­றதே என்­றதோர் அர­சியல் உள­வியல் நிலை­மையை போலி­யாக உரு­வ­கித்து, அந்த வகையில், முட்­டாள்­த­ன­மாக நடந்து கொள்ள முயற்­சிக்க கூடாது என்று யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு, அடுத்த கட்ட வாழ்க்­கைக்கு என்ன செய்­வது என்று தெரி­யாமல் தடு­மா­றி கொண்­டி­ருந்த தமிழ் மக்­களை எச்­ச­ரிக்கை செய்­தி­ருந்தார்.
நோக்­கமும் செயற்­பா­டு­களும்
விடு­த­லைப்­பு­லி­களின் பிடியில் இருந்து தமிழ் மக்­களை மீட்­டுள்ள இரா­ணு­வத்­திற்கும் ,அர­சாங்­கத்­திற்கும் தமிழ் மக்கள் நன்­றி­யு­டை­ய­வர்­க­ளாக நடந்து கொள்ள வேண்டும் என அவர் அர­சியல் ரீதி­யாக தனது அமைச்­சர்கள், அரசு சார்ந்த அர­சி­யல் ­வா­திகள், முக்­கிய சிவில் மற்றும் இரா­ணுவ உயர் அதி­கா­ரி­களின் ஊடாக தொடர்ச்­சி­யாக அறி­வு­றுத்­தி­யி­ருந்தார். இத்­த­கைய அர­சியல் பிர­சார நட­வ­டிக்­கை­களின் ஊடாக, தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பில் உணர்­வு­பூர்­வ­மாக அணி­தி­ரண்­டி­ருந்த தமிழ் மக்­களின், அர­சியல் செல்­நெ­றிக்­கான மார்க்­க­மாக தனது கட்­சி­யா­கிய சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியை அவர்கள் மத்­தியில் வளர்த்­தெ­டுப்­ப­தற்­கான முயற்­சி­களே மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.
அன்­றைய அர­சாங்­கத்தின் இது­ போன்ற நட­வ­டிக்­கை­களும், ஏனைய அர­சியல் செயற்­பா­டு­களும், தமிழ் மக்­களின் தாயக பிர­தே­ச­மா­கிய வடக்­கிலும், கிழக்­கிலும் அவர்­களின் அர­சியல், சமூக, கலை கலா­சார தனித்­து­வ­மான தன்­மையை படிப்­ப­டி­யாக இல்­லா­தொ­ழித்து, சிங்­கள மய­மாக்­கு­வ­தையே அடிப்­படை நோக்­க­மாக கொண்­டி­ருந்­தன.
ஆங்­கி­லேயர் நாட்டை விட்டு சென்­றதன் பின்னர் சுதந்­திர இலங்­கையில் மலர்ந்த சுதேச ஆட்­சியை, முழு­மை­யான பௌத்த சிங்­கள சுய ஆட்­சி­யாக உரு­வாக்­கு­வ­தையே, சிங்­கள பேரி­ன­வாத ஆட்­சி­யா­ளர்கள் தமது நோக்­க­மாக கொண்­டி­ருந்­தார்கள். சிங்­கள பௌத்த தேசம் என்­பதே சிங்­கள பேரின அர­சி­யல் ­வா­தி­க­ளி­னதும், பௌத்த மத­ வா­தி­க­ளி­னதும் மாற்ற முடி­யாத அடிப்­படை அர­சியல் கொள்­கை­யாக இருந்­தது. இப்­போதும் இருக்­கின்­றது. அந்த இலக்கை பூர­ண­மாக அடை­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களே பல்­வேறு வடி­வங்­களில் சிங்­கள பேரி­ன­வாத அர­சு­க­ளினால் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.
தமிழ் மக்­களின் நியா­ய­மான அர­சியல் உரி­மைக்­கான போராட்டம் பயங்­க­ரவா­த­மாக சித்­த­ரிக்­கப்­பட்டு, அந்த பயங்­க­ர­வா­தத்தை முறி­ய­டிப்­ப­தற்கே, இரா­ணுவ நட­வ­டிக்கை என்­பது, சர்­வ­தேச அளவில் முன்­னைய அர­சாங்­கத்­தினால் வெளிப்­ப­டை­யாக நியா­யப்­ப­டுத்­தப்பட்டது. பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான இரா­ணுவ நட­வ­டிக்கை என்ற போர்­வையில் தமிழ் மக்­களின் அர­சியல் போராட்டம் நுணுக்­க­மான அர­சியல் தந்­தி­ரோ­பாய செயற்­பா­டு­களின் மூலம் அடித்து நொறுக்­கப்­பட்­டது. இதுவே இலங்­கையின் உள்­நாட்டு ஆயுத முரண்­பாட்டின் முடி­வாக – யுத்­தத்­திற்கு முடி­வு­கட்டும் நட­வ­டிக்­கை­யாக 2009 ஆம் ஆண்டு மே மாதம் அரங்­கே­றி­யி­ருந்­தது.
அள­வுக்கு மிஞ்­சிய இரா­ணுவ பலத்தை பிர­யோ­கித்து, இரா­ணுவ ரீதி­யாக தோற்­க­டிக்­கப்­பட்ட விடு­த­லைப்­பு­லிகள் மீண்டும் தலை­யெ­டுக்­க ­பார்க்­கின்­றார்கள், அதற்­கான மறை­முக வேலைத்­திட்­டங்கள் புலம்­பெயர் தமி­ழர்கள் மத்­தியில் மறைந்து வாழ்­கின்ற விடு­த­லைப்­பு­லி­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன என்ற பிர­சாரம் தொடர்ச்­சி­யாக மேற்கொள்ளப்­பட்­டி­ருப்­பதை காணலாம். இது உண்­மை­யி­லேயே விடு­த­லைப்­பு­லிகள் மீண்டும் உயிர்த்­தெ­ழுந்­து­ விடக் கூடாது, மீண்டும் ஒரு யுத்த நிலைமை உரு­வா­கி ­விடக் கூடாது என்ற தேசிய நலன்­சார்ந்த ஒரு செயற்­பா­டல்ல. மீண்டும் ஒரு யுத்த நிலைமை உரு­வா­கி­ விடக் கூடாது என்றால் யுத்தம் மூள்­வ­தற்­கு­ரிய மூல கார­ண­மா­கிய தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைகள் வழங்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். அதற்­கான அர­சியல் தீர்வு நிலைத்து நிற்­கத்­தக்க வகையில் காணப்­பட்­டி­ருக்க வேண்டும்.
தொடர்ச்­சி­யான இன அடக்­கு­ மு­றைக்கும், ஒடுக்கு முறைக்கும் உள்­ளா­கிய தமிழ் மக்­களின் அன்­றாட பிரச்­சி­னைகள், அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு இதய சுத்­தி­யுடன் தீர்வு காண்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால், அது நடக்­கவே இல்லை.  அத்­த­கைய நட­வ­டிக்­கைகள் குறித்து சிந்­திப்­ப­தற்­கு கூட பேரின அர­சி­யல் ­வா­தி­களும், பௌத்த சிங்­கள தேசி­ய­ வா­தி­க­ளான அர­சியல் தீவி­ர­வா­தி­களும் தயா­ராக இல்லை. மாறாக, யுத்­தத்தின் மூலம் அர­சியல் ரீதி­யா­கவும், இரா­ணுவ ரீதி­யா­கவும் அடக்கி ஒடுக்­கப்­பட்­டுள்ள தமிழ் மக்­களை, தந்­தி­ரோ­பாய அர­சியல் செயற்­பா­டு­களின் மூலம் மேலும் மேலும் நெருக்கி நசுக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களே முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.
இந்த செயற்­பா­டுகள் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ­வினால், யுத்­தத்தின் பின்­ன­ரான நல்­லி­ணக்க முயற்­சி­க­ளுக்­கான வேலைத்­திட்டம் என்ற பெயரில் வெளிப்­ப­டை­யா­கவே  முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. ஆட்சி மாற்­றத்தின் பின்னர், அதி­கா­ரத்­திற்கு வந்­துள்ள நல்­லாட்சி அர­சாங்­கமும் மஹிந்த ராஜ­பக் ஷவின் வழி­மு­றையில் இருந்து விலகி செல்­வ­தாக தோன்­ற­வில்லை.
நிலை­மைகள் 
தமிழ் மக்­களின் தாயக பிர­தே­ச­மா­கிய வடக்கும் ,கிழக்கும் இணைந்த சுயாட்­சி­கொண்ட சமஷ்டி ஆட்சி முறையே அர­சியல் தீர்­வாக காணப்­பட வேண்டும் என்ற கோரிக்கை, வடக்கும் ,கிழக்கும் தனித்­தனி மாகா­ணங்­க­ளாக பிரிக்­கப்­பட்டு, அங்கு இரண்டு மாகா­ண­ ச­பை­களை செயற்­பட செய்­ததன் மூலம் அர­சியல் ரீதி­யாக பல­மி­ழக்க செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது. இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்தின் ஊடாக மாகாண நிர்­வாக செயற்­பா­டாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட சமஷ்டி முறையை அடிப்­ப­டை­யாக கொண்ட அர­சியல் தீர்வும் அர்த்­த­மற்­ற ­தாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. மாகா­ணங்­க­ளுக்­கென 13 ஆவது அர­சியல் திருத்த சட்­டத்தின் கீழ் அரை­குறை நிலையில், விருப்­ப­மில்­லா­மலும், வேறு வழி­யின்­றியும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட மாகாண ஆட்சி நிர்­வா­கத்தை கொண்ட சமஷ்டி ஆட்சி முறை­யையும் ஒற்­றை­யாட்­சியின் மேலோங்­கிய அதி­கா­ர ­பல பிர­யோ­கத்தின் மூலம் பேரி­ன­வாத அர­சாங்­கங்கள் சீர்­கு­லைத்­தி­ருக்­கின்­றன.
நல்­லாட்சி அர­சாங்­க­மும் ­கூட, வடக்கு, கிழக்கு மாகா­ண ­ச­பை­களின் சீரான செயற்­பா­டு­க­ளுக்­கு­ரிய வழி­மு­றை­களை உரு­வாக்கி, ஆட்சி அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொள்­வ­தற்கு தேர்­தலில் பேரா­த­ரவு வழங்­கிய தமிழ் மக்­க­ளுக்கு தான் ஆற்ற வேண்­டிய அர­சியல் நன்­றிக்­க­ட­னாக செய்­வ­தற்­கு கூட, செய்ய தவ­றி­யி­ருக்­கின்­றது.
யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை பூர­ணப்­ப­டுத்­து­வ­தற்­காக இரா­ணு­வத்தின் பிடியில் உள்ள பொது­மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­படும். இரா­ணுவ மய­மாக்­கப்­பட்­டுள்ள வடக்­கிலும் ,கிழக்­கிலும் சிவில் நட­வ­டிக்­கைகள் முழு­மை­யாக சீராக்­கப்­படும், இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­படும். அர­சியல் கைதி­களின் விடு­தலை, வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் பிரச்­சினை ஆகிய இழு­பறி நிலையில் உள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­படும் என்ற, ஐக்­கிய தேசியக் கட்­சியும், சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்த கூட்­ட­ணியின் தேர்தல் காலத்து ஆணைகள் காற்றில் பறக்­க­வி­டப்­பட்­டி­ருக்­கின்­றன.
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவை எதிர்த்து ஜனா­தி­பதி தேர்­தலில் பொது வேட்­பா­ள­ராக, மோச­மான உயி­ரச்­சு­றுத்­த­லுக்கு மத்­தியில் கள­மி­றங்­கிய மைத்­தி­ரி­பால சிறி­சேன மீது மிகுந்த நம்­பிக்கை வைத்து, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அவரை தேர்­தலில் வெற்­றி ­பெற செய்­தார்கள். தனது தேர்தல் வெற்­றிக்கு துணை­யாக இருந்த தமிழ் மக்­க­ளுக்கு நன்­றி­யு­டைய முறையில் செயற்­ப­டு­வ­தாக பல தட­வைகள் பொது மேடை­க­ளிலும், முக்­கி­ய­மான பொது நிகழ்­வு­க­ளிலும் உறு­தி­ய­ளித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, சாதா­ரண  பிரச்­சி­னை­க­ளுக்கு கூட தீர்வு காண முடி­யா­த­வ­ராக, ஜனா­தி­பதி என்ற முறையில் தனது நிறை­வேற்று அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்த முடி­யா­த­வ­ரா­கவே காட்­சி­ய­ளிக்­கின்றார்.
சிங்­கள பௌத்த தேசி­ய­ வா­தி­க­ளி­னதும், பௌத்த சிங்­கள அர­சியல் தீவி­ரவா­தி­க­ளி­னதும், பௌத்த மத தீவி­ர­ வா­தி­க­ளி­னதும் இறுக்­க­மான பிடியில் இருந்து அவரால் வெளி­வர முடி­ய­வில்லை. ஜனா­தி­பதி என்ற ரீதியில், தனக்­குள்ள நிறை­வேற்று அதி­காரம் என்ற அர­சியல் பலத்தை துணி­வோடு பயன்­ப­டுத்த முடி­யா­த­வ­ரா­க­வுமே காணப்­ப­டு­கின்றார்.
இதனால், ஜனா­தி­ப­தியின் மீதும், நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீதும் தமிழ் மக்கள் படிப்­ப­டி­யாக நம்­பிக்கை இழந்து வந்­துள்­ளார்கள். மஹிந்த ராஜ­பக் ­ஷ­விலும் பார்க்க ஒப்­பீட்­ட­ளவில் மைத்­தி­ரி­பால சிறி­சேன நல்­லவர் வல்­லவர், அவரின் உத­வி­யோடு தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணலாம், இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வை எட்­டி ­வி­டலாம் என்று தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சி தலை­வ­ரு­மா­கிய இரா.சம்­பந்தன் நம்­பினார். தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் விட­யங்­க­ளிலும், அர­சியல் விவ­கா­ரங்­க­ளிலும் மென்­போக்­கு­டை­யவர் என்ற ரீதியில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மீதும் சம்­பந்தன் நம்­பிக்கை கொண்­டி­ருந்தார். அந்த நம்­பிக்­கையை யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்கள் மத்­தியில் நிலைத்­தி­ருக்க செய்­வ­தற்கும் அவர் பாடு­பட்­டி­ருந்தார்.
அந்த நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் நல்­லாட்சி அர­சாங்க தலை­வர்­க­ளான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் பௌத்த சிங்­கள தீவிர தேசி­ய ­வா­தி­க­ளினால் பாதிப்பு ஏற்­பட்­டு­ விடக் கூடாது. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பலம் குன்­றி­ விடக் கூடாது என்­ப­தற்­காக நல்­லாட்சி அர­சுக்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்கி, எதிர்க்­கட்சி தலை­வ­ராக இருந்த போதிலும், அர­சாங்­கத்தின் பங்­காளி என்று வர்­ணிக்கும் அள­வுக்கு சம்­பந்தன் இணைந்து செயற்­பட்டு வந்தார். அவ­ருக்கு பக்­க­ப­ல­மாக தமி­ழ­ர­சு ­கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய மாவை சேனா­தி­ராஜா, கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய சுமந்­திரன் ஆகி­யோரும், ஏனைய கூட்­ட­மைப்பின் தலை­வர்­களும் செயற்­பட்­டி­ருந்­தார்கள்.
ஆனால், நல்­லாட்சி அர­சாங்கம் தனது உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­றாத கார­ணத்­தி­னாலும், தமிழ் மக்­களின் சமூக, அர­சியல், பொரு­ளா­தார நிலை­மைகள் மட்­டு­மல்­லாமல், தாயக பிர­தே­சத்­தி­லேயே அவர்­களின் இருப்பு கேள்­விக்­கு­றிக்கு உள்­ளாகி வரு­வ­த­னாலும்  தமிழ் மக்­களை போலவே, சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வர்­களும் அரசு மீதும் அரச தலை­வர்கள் மீதும் நம்­பிக்கை இழக்கும் நிலைக்கு தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.
நடப்­ப­தென்ன……?
அர­சியல் உரிமை மறுக்­கப்­பட்ட நிலையில் மட்­டு­மல்­லாமல், பல முனை­களில் இன்று தமிழ் மக்கள் நெருக்­க­டி­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வரு­கின்­றார்கள். நெருக்­க­டி­க­ளுக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு கண்டு, தமிழ் மக்­களின் மனங்­களை வென்­றெ­டுக்க வேண்­டிய அரசு, அந்த பொறுப்பை நிறை­வேற்­று­வதில் கவனம் செலுத்­தாத ஒரு போக்­கையே காண முடி­கின்­றது.
வன­ப­ரி­பா­லன திணைக்­க­ளமும், தொல்­பொருள் தேசிய மர­பு­ரி­மைகள் அமைச்சின் கீழ் இயங்­கு­கின்ற தொல்­லியல் திணைக்­க­ளமும் தான்­தோன்­றித்­த­ன­மாக செயற்­ப­டு­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்த திணைக்­க­ளங்கள், தமிழ் மக்­களின் பூர்­வீக வாழ்­வி­டங்­க­ளையும், வர­லாற்று ரீதி­யான அவர்­களின் வணக்­க ­த­லங்­க­ளிலும் அடா­வ­டித்­த­ன­மாக அத்­து­மீறி பிர­வே­சித்து அவற்­றுக்கு உரிமை கோரு­கின்­றன.
வனப்­பி­ர­தே­சங்­க­ளுக்கு பொறுப்­பாக இருக்க வேண்­டிய வன­ப­ரி­பா­லன திணைக்­களம், முப்­பது வரு­டங்­க­ளாக தொடர்ந்த யுத்த சூழ்­நிலை கார­ண­மா­கவும், யுத்தம் முடிந்து ஒன்­பது வரு­டங்­களின் பின்­னரும் இடம்­பெ­யர்ந்த மக்கள் தங்­க­ளு­டைய சொந்த இடங்­க­ளுக்கு சுதந்­தி­ர­மாக சென்று மீள்­கு­டி­யேற முடி­யாமல் தடுக்­கப்­பட்­டி­ருப்­ப­த­னாலும் பற்­றை­களும் மரம், செடி, கொடி­களும் வளர்ந்து காடாக காட்சி தரு­கின்ற குடி­யி­ருப்பு நிலங்­களை, வனப்­ப­குதி என்று உரிமை கோரி சண்­டித்­தனம் செய்­வது சாதா­ரண நிகழ்­வா­கி­யுள்­ளது. வன­ப­ரி­பா­லன திணைக்­க­ளத்தின் இந்த அதி­கார துஷ்பி­ர­யோ­கத்தை எதிர்ப்­ப­தற்கு சட்ட ரீதி­யான அந்­தஸ்தும், வச­தி­களும் இல்­லாத நிலையில் தமிழ் மக்கள் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.
குடி­யி­ருப்பு காணிகள் மட்­டு­மல்­லாமல், தமிழ் மக்­களின் வாழ்­வா­தா­ரத்­துக்கு அடிப்­ப­டை­யான நீர்ப்­பா­சன குளங்கள், வயல் நிலங்கள் உள்­ளிட்ட விவ­சாயம் சார்ந்த நிலப்­ப­கு­தி­க­ளிலும் வன­ப­ரி­பா­லன திணைக்­க­ளத்தின் ஆக்­கி­ர­மிப்பு செயற்­பா­டுகள் விரி­வ­டைந்­தி­ருக்­கின்­றன.  இதே­போன்று தொல்­லி­யல் திணைக்­க­ளமும், தமிழ் மக்கள் பூர்­வீ­க­மாக வாழ்ந்து வழி­பட்டு வந்­துள்ள வணக்­க ­த­லங்கள் அமைந்­துள்ள இடங்­களில், அத்­து­மீறி பிர­வே­சித்து, தான்­தோன்றித்தன­மாக அந்த இடங்கள் தொல்­லி­யல் திணைக்­க­ளத்­திற்கு உரி­யது என்று உரி­மை­ பா­ராட்டி அதி­காரம் செலுத்தி வரு­கின்­றது. அந்த இடங்­களில் தங்­க­ளு­டைய நட­வ­டிக்­கைகள் இடம்­பெற வேண்டும் என்­ப­தற்­காக நாள­டைவில் அங்கு வசித்து வரு­கின்ற மக்­களை சட்­டத்தின் துணை கொண்டு வெளி­யேற்­று­கின்ற நட­வ­டிக்­கை­க­ளுக்­கான அடித்­தளம் இடப்­ப­டு­வ­தையே இந்த நட­வ­டிக்­கை­களின் மூலம் காண முடி­கின்­றது.  சில இடங்­களில் வன­ப­ரி­பா­லன திணைக்­களம், தொல்­லி­யல் திணைக்­களம் இரண்­டுமே இணைந்து அங்கு மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற புனர்­வாழ்வு செயற்­பா­டுகள், புன­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் என்­ப­வற்­றுக்கு அதி­கார பலத்தை பிர­யோ­கித்து தடை­யேற்­ப­டுத்­து­கின்ற செயற்­பா­டு­களும் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. குறிப்­பாக கிளி­நொச்சி மாவட்­டத்தின் மிகப்பெரிய விவ­சாய குள­மா­கிய இர­ணை­ம­டு கு­ளத்தின் புனர் நிர்­மாண பணி­களில் நீர்ப்­பா­சன திணைக்­க­ளத்­திற்கு சட்­ட ­ரீ­தி­யாக உரி­மை­யுள்ள நிலப்­ப­கு­தியில் இருந்து மண் அகழ்ந்­தெ­டுத்து குளக்­கட்­டுக்கு பயன்­ப­டுத்த முற்­பட்­ட­ போது, இந்த திணைக்­க­ளங்கள் இரண்டும் அந்த இடத்­திற்கு உரிமை கோரி, தமது அதி­கார பலத்தை பிர­யோ­கித்து தடை­யேற்­ப­டுத்­தி­யி­ருந்­தார்கள். இதனால் நீர்ப்­பா­சன திணைக்­களம் தனது அபி­வி­ருத்திப் பணி­களை முன்­னெ­டுப்­பதில் மிகுந்த சிர­மங்­க­ளுக்கும் கஷ்­டங்­க­ளுக்கும் ஆளா­கி­யி­ருந்­தது.
மீள்­கு­டி­யேற்ற பிர­தே­சங்­களில் பல இடங்­களில் வன­ப­ரி­பா­லன திணைக்­க­ளத்தின் தலை­யீடு கார­ண­மாக அதி­கா­ர­பூர்­வ­மாக உரித்­து­டைய குடி­யி­ருப்பு காணி­களில் இடம்­பெ­யர்ந்த மக்கள் மீள்­கு­டி­யேற முடி­யாத நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. அதே­போன்று யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர், தேசிய மர­பு­ரி­மைகள் அமைச்சு தொல்­லியல் திணைக்­க­ளத்தின் ஊடாக மேற்­கொண்­டுள்ள நட­வ­டிக்­கைகள் வட­மா­கா­ணத்தில் தமிழ் மக்­க­ளு­டைய இருப்பை பல இடங்­களில் கேள்­விக்­கு­றிக்கு உள்­ளாக்­கி­யி­ருக்­கின்­றது.
தேசிய மர­பு­ரி­மைகள் அமைச்­சினால், 188 ஆம் அத்­தி­யாய தொல்­லியல் கட்­டளை சட்­டத்தின் 16 ஆம் பிரிவின் கீழ் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட 1823/73 ஆம் இலக்க அதி­வி­சேட வர்த்­த­மானி பத்­தி­ரிகை பிர­க­ட­னத்தின் கீழ் வட­மா­கா­ணத்தில் 82 இடங்கள் பெயர் குறிப்­பி­டப்­பட்டு, அந்த இடங்கள் தொல்­லியல் திணைக்­க­ளத்­திற்கு உரியவை என உரிமை கோரப்பட்டிருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் 82 இடங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, அந்த இடங்களில் தமிழ் மக்களுடைய வரலாற்று சான்றுகளையும் மத சான்றுகளையும் அழித்து பௌத்தத்தை திணிக்கின்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் வடமாகாண சபை அமர்வின் போது சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
தமிழருடைய தொல்லியல் சான்றுகள் அமைந்துள்ள இடங்களில் அவற்றை அழித்து, பௌத்த மத திணிப்பை மேற்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரேரணையொன்றின் மூலம் கோரியிருக்கின்றார். அவருடைய இந்த பிரேரணை வடமாகாண சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் 47 இடங்களிலும், மன்னாரில் வரலாற்று சிறப்பு மிக்க திருக்கேதீஸ்வர ஆலயத்தின் முன்பக்கத்தில் உள்ள தூண்கள் அமைந்துள்ள பகுதி உட்பட 19 இடங்களையும், சுன்னாகம் பொது சந்தை அமைந்துள்ள இடம் உட்பட யாழ். மாவட்டத்தில் 9 இடங்களையும், வவுனியா மாவட்டத்தில் 7 இடங்களையும் குறிப்பிட்டு, மொத்தமாக 82 இடங்களை தொல்லியல் திணைக்களம் உரிமை கோரியிருப்பதாக ரவிகரன் தனது பிரேரணையில் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ள பல இடங்களில் புத்தர் சிலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், பௌத்த விகாரைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் பகிரங்கமாக அதிகாரிகளும் பௌத்த மத குருக்களும் மேற்கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இந்த நடவடிக்கைகள் வெறுமனே பௌத்த மத திணிப்பு செயற்பாடு என கருத முடியாது. இது போன்ற நடவடிக்கைகள் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த இடங்களில் அவர்களின் வாழ்வுரிமையை மறுத்து, அவர்களின் இருப்பை இல்லாமல் செய்வதற்கான நன்கு திட்டமிட்ட செயற்பாடாகவே கருத வேண்டியிருக்கின்றது. இதுபோன்ற நடவடிக்கைகள் நாட்டில் நல்லாட்சி நடக்கும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று நம்பிக்கையோடு எதிர்பார்க்கப்பட்ட நல்லாட்சியில் மறைமுகமான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. தமிழர்களின் எதிர்கால வாழ்க்கை. அவர்களின் இருப்பு என்பவற்றை கேள்விக்கு உள்ளாக்கியுள்ள இந்த நடவடிக்கைகள் கவலைக்குரியவை. தமிழ் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பினரதும் கவனத்திற்கு உரியவை.
« PREV
NEXT »

Facebook Comments APPID