BREAKING NEWS
latest

Monday, July 16, 2018

யுத்த உபகரணங்கள் மீட்பு


முல்லைத்தீவு வெள்ள முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் கைக்குண்டு உள்ளிட்ட ஒரு தொகை யுத்த உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மீள குடியமரச் சென்ற ஒருவர் தமது காணியை சுத்திகரித்துக் கொண்டிருந்த நிலையில், புதைக்கப்பட்டிருந்த குறித்த வெடிப்பொருட்கள் நேற்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட ஆயுதங்களில் ஆர்.பி.ஜீ குண்டுகள், 2 கை குண்டுகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தயாரிக்கப்பட்ட 03 கை குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
யுத்த காலத்தில் விடுதலை புலிகள் அமைப்பினால் குறித்த ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்
« PREV
NEXT »

Facebook Comments APPID