BREAKING NEWS
latest

Monday, July 30, 2018

விச ஊசியில் சிக்கி மீண்டும் ஒரு போராளி திடீர் மரணம்!


யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் போராளி ஒருவர் சாவடைந்துள்ளார் 32 வயதுடைய கோணாமலை பிரதீபன் என்ற இளைஞனே சாவடைந்துள்ளார் நேற்று முன்தினம் அவரது தாயாரின் இரண்டாவது திவசம் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் வாளை இலை வெட்டுவதற்காக வீட்டின் பின்னால் உள்ள கிணற்றடி பகுதிக்கு சென்றவரை நீண்ட நேரம் காணவில்லை என்று தேடிச்சென்றபோது தண்ணீர்த் தொட்டியில் மயங்கியநிலையில் காணப்பட்டார் உடனே சாவகச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
குறித்த போராளி 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் சிங்கள படைகளால் கைது செய்யப்பட்டு தடுப்புமுகாமில் வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் தனக்கு தடுப்பு ஊசி என கூறி 3 ஊசிகள் இராணுவ வைத்திய அதிகாரிகளால் போடப்பட்டதாக யாழ் வைத்தியர் ஒருவருக்கு”வைத்தியத்திற்கு சென்ற போது கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள் தமிழ் மக்களை உலுக்கி விட்டிருக்கின்றன. அரச புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் இதுவரை 120 பேர் புற்றுநோய், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் மரணித்திருக்கின்றார்கள்.
குறிப்பாக, புனர்வாழ்வு முகாம்களில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாகவும் மெல்லக் கொல்லும் விசம் உணவில் கலக்கப்பட்டு வழங்கப்பட்டதாகவும் அந்தச் சந்தேகங்கள் அலையாக மேலெழும்பின. புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி என்கிற சிவகாமி ஜெயக்குமாரன் கடந்த ஆண்டு புற்றுநோயின் தாக்கத்தினால் மரணமானார். அவரின் மரணத்தை அடுத்தே விச ஊசி விவகாரம் கூடுதல் கவனம் பெற்றது.
அதன் தொடர்ச்சியாக, விச ஊசி விவகாரம் அனைத்துத் தளங்களிலும் உரையாடப்படும் விடயமாக மாறியது. இந்த நிலையில், அண்மையில் வடக்கில் நடைபெற்ற நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலணியின் அமர்வு ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் போராளியொருவர், புனர்வாழ்வு முகாம்களில் தமக்கு தடுப்பு ஊசி என்று தெரிவிக்கப்பட்டு விச ஊசி ஏற்றப்பட்டதாகவும் அதனால், மரணங்கள் அங்கேயே சம்பவித்ததாகவும் உணவில் விசம் கலக்கப்பட்டு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
« PREV
NEXT »

Facebook Comments APPID