BREAKING NEWS
latest

Monday, July 16, 2018

சிவாஜிலிங்கம் மீதான வழக்கு- ஒத்திவைப்பு!

அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மீது முல்லைத்தீவு நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வட்டுவாகல் கடற்படை முகாம் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தின் போது அரச சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
« PREV
NEXT »

Facebook Comments APPID