BREAKING NEWS
latest

Tuesday, July 17, 2018

மஹிந்தவுக்கு சீனா கொடுத்த நிதி குறித்த விசாரணைகள் ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களுக்காக சீன நிறுவனம் வழங்கிய நிதி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைத்த சீன நிறுவனம், 2015 ஜனாதிபதி தேர்தலின்போது மஹிந்த ராஜபக்சவுக்கு நிதி வழங்கியுள்ளது.

 இதன்படி 2014 மற்றும் 2015ஆம் ஆண்டு காலத்தில் 1398 மில்லியன் ரூபா பெறுமதியான 82 காசோலைகள் மஹிந்த ராஜபக்சவின் அலுவலகத்துக்கு பரிமாற்றப்பட்டுள்ளன. குறித்த காசோலைகள் யாவும் தற்போது விசாரணையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

Facebook Comments APPID