BREAKING NEWS
latest

Thursday, July 19, 2018

கைது செய்யப்பட்ட சீமான் ; குண்டர் சட்டம் பாய்ச்ச திட்டம்?

ரூ.10000 கோடி மதிப்பில் சேலம் - சென்னை வரை அமைக்கப்பட உள்ள 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை துவங்கியுள்ளது அரசு. ஆனால், தங்களின் அடிப்படை வாழ்வாதாரமான விவசாய நிலங்களை கையகப்படுத்துவதனை அப்பகுதி மக்கள் விரும்பவில்லை. அதன் காரணமாக 8 வழிச்சாலைக்கு எதிராக போராடி வருகின்றனர்.
அதே சமயம், 8 வழிச்சாலை விவகாரத்தில் எடப்பாடியின் பினாமி மற்றும் உறவினர்களே தொடர்புபட்டுள்ள காரணத்தினால் சாலைக்கான பணிகளை துரிதப்படுத்துவதில் மும்முரம் காட்டிவருகிற எடப்பாடி, அப்பகுதி மக்கள் சுதந்திரமாக அழுவதற்கு கூட தடைகளை ஏற்படுத்தும் வண்னம் செயலாற்றிவருகிறார்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவோ, அவர்களின் கருத்துக்களை கேட்டறியும் முனையும் அரசியல் கட்சி தலைவர்கள் மீது கைது நடவடிக்கை பாய்ச்சப்படுவதுடன், குண்டாஸ் உள்ளிட்ட சட்டங்கள் ஏவப்படுகின்றன.
அந்த வகையில், நேற்றைய தினம் சேலம் மாவட்டம் பாரப்பட்டி - கூமங்காடு என்ற இடத்தில் 8 வழிச்சாலை குறித்து மக்களின் கருத்துக்களை கேட்டறிய முனைந்த சீமானை கைது செய்து அதிரடி கிளப்பியுள்ளது காவல்துறை.
அரசுக்கு எதிரேகா பொதுமக்களை போராட தூண்டிவிடுவது போன்றவையே கைதுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிற நிலையில், சீமானின் செயல்பாட்டை முடக்கும் வண்ணம் அவர் மீது குண்டாஸ் உள்ளிட்ட சட்டங்களை பயன்படுத்தி வழக்கு பதிவு செய்து நீண்ட நாட்களுக்கு சிறையிலடைக்கவும் அரசு தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இன்னும் ஒரு படி மேலே சென்று நாம் தமிழர் கட்சியை முடக்கவும் ஆளும் தரப்புகள் முனையலாம் என நம்மிடம் கிசுகிசுகின்றன உயர் அதிகார வட்டாரங்கள்.
« PREV
NEXT »

Facebook Comments APPID