BREAKING NEWS
latest

Monday, July 9, 2018

ஶ்ரீலங்கா பேரினவாத வான் பூதங்கள் நவாலியில் தமிழர் குருதியை குடித்த நாள் இன்று!

வடதமிழீழம், இலங்கை விமானப் படையினர் நடத்திய மிகப்பெரிய மனிதப்படுகொலைகளில் ஒன்றான நவாலி படுகொலையின் 23வது நினைவுநாள் இன்றாகும். ஒரே தடவையில் 147 தமிழர்களை பலி கொண்ட இந்த படுகொலையின் 23 ஆவது நினைவு நாள் நவாலி தேவாலயத்திலும், சின்ன கதிர்காமர் ஆலயத்திலும் அனுட்டிக்கப்படவுள்ளது.

1995இல் யாழ் குடாநாட்டை கைப்பற்ற முன்னேறிப்பாய்தல் நடவடிக்கையை இராணுவம் ஆரம்பித்தது. ஆகோர எறிகணை தாக்குதல்களால் வலிகாமம் தெற்கு, மேற்கு, வடக்கு, தென் மேற்கு பகுதி மக்கள் இடம்பெயர்ந்து நவாலி பகுதியில் தங்கியிருந்தனர். சென்.பீற்றர்ஸ் ஆலயம், சின்னக்கதிர்காம முருகன் ஆலயம், பொதுமக்கள் வீடுகளில் தங்கியிருந்தனர்.

23வருடங்களின் முன்னர் இதே நாளில் விமானப்படையின் புக்காரா விமானங்கள் 13 குண்டுகளை மக்கள் குடியிருப்புக்கள், ஆலயங்களை இலக்கு வைத்து வீசின.

 நவாலி சென் பீற்றர்ஸ் ஆலயம், சின்னக்கதிர்காம முருகன் ஆலயம், அயலிலிருந்த 67 வீடுகள் முற்றாக அழிந்தன. 147 மக்கள் துடிதுடித்து கொல்லப்பட்டனர்.

எரிபொருள் தடை, மருந்துத்தடைகளால் மக்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவோ, சிகிச்சையளிக்கவோ முடியாமல் போனது. 360 பேர் வரை காயமடைந்தனர். பலர் அவயங்களை இழந்தனர்.

சண்டிலப்பாய் பிரதேசசெயலக பிரிவில் கடமையாற்றிய ஜே-134 நவாலி வடக்கு கிராம அலுவலரான செல்வி ஹேமலதா செல்வராஜா, சில்லாலை பிரிவு கிராம அலுவலர் பிலிப்புப்பிள்ளை கபிரியேல்பிள்ளை ஆகியோர் கடமைநேரத்தில் மரணமானார்கள்.

மக்களிற்கு உணவு, தண்ணீர் வழங்கிக் கொண்டிருந்த தொண்டர்கள் 48 பேரும் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியோ, இழப்பீடோ கிடைக்கவில்லை. பாதிப்பு விபரங்களை அரசு சேகரித்தபோதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


இன்றையதினம் நவாலி சென்பீற்றர்ஸ் ஆலயத்திலும், சின்னக்கதிர்காம முருகன் ஆலயத்திலும் விளக்கேற்றப்பட்டு, விசேட பூசை வழிபாடுகள் நடக்கவுள்ளன.

சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் விமானப்படைக்கு சொந்தமான புக்காரா விமானங்களின் இனப்படுகொலை வேட்டைகளில் ஒன்றுதான் நவாலி தேவாலயப் படுகொலை.

உண்மையில் நவாலிப்படுகொலை என்பது ஈழத் தமிழ் மக்களால் மறக்க முடியாத வடு. 1995ஆம் ஆண்டு. ஜூலை ஒன்பதாம் நாள் வலிகாமம் பகுதியில் இலங்கை அரச படைகள் “முன்னேறிப் பாய்தல்” எனும் பெயர் கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த காலத்தில் அந்த படை நடவடிக்கை்கு வலுச்சேர்க்கும் பொருட்டே இவ் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.
காரைநகர், மாதகல், சேந்தாங்குளம், அளவெட்டி வடக்கு, ஆகிய பகுதிகளிலிருந்து தாக்குதல் நடவடிக்கையை இலங்கை அரச படைகள் தொடங்கின. நிலைகுலைந்த மக்கள் இடம்பெயரத் தொடங்கினர்.
 கையில் அகப்பட்டவற்றை எடுத்தபடி, உடுத்த உடையுடன் வெளியேறிய மக்கள் தமது உயிரை பாதுகாக்கும் பொருட்டு தஞ்சம் தேடி அலைந்தனர்.
இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயத்திலும் நவாலி சின்னக் கதிர்காமம் முருகன் ஆலயத்தில் தங்கி இளைப்பாறி தாகம் தீர்த்தவேளையில்தான் மாலை 5.45 மணியளவில் சிறீலங்கா  விமானப்படைக்கு சொந்தமான புக்காரா விமானங்கள்  இக் கொடூரக் குண்டுவீச்சுத் தாக்குதலை நடாத்தின.
இலங்கை அரசாங்கம்  அப்பாவி மக்கள்மீது சட்டவிரோதமான முறையில் குண்டுகளை வீசி தமிழ் மக்களை இனப்படுகொலை செய்கிறது என்பதை இந்த தாக்குதல் அம்பலப்படுத்தியது.
இந்த இனப்படுகொலைத் தாக்குதலில் 127 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். சுமார் 360க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். வயோதிபர்கள், குழந்தைகள், பெண்கள் என்று ஆலய வாசல்களிலும் முற்றங்களிலும் மக்கள் கொன்று வீசப்பட்ட அந்தக் காட்சிகளை தமிழ் மக்களின் மனங்களிலிருந்து என்றும் அழி்க்க முடியாது. 
உயிரை பாதுகாக்க தஞ்சம் தேடி வந்த  மக்கள், கையின்றியும், காலின்றியும் துடிதுடித்துக் கிடந்தனர்.
இதில் இடம்பெயர்ந்த்உ வந்து அவதிப்பட்ட மக்களூக்கு தொண்டாற்ற வந்த 48 தொண்டர்களும் அந்த இடத்திலேயே  துடித்து இறந்தார்களாம். நவாலி கிராமே இந்த இன அழிப்பு விமானத் தாக்குதலால் அதிர்ந்தது. ஆலய சுற்றாடல் முழுவதும் தசைத் துண்டுகளும் குருதியும் பரந்து கிடந்தது.
சிங்கள பெளத்த பேரினவாதிகள் தமிழருக்கான உரிமையையோ, சுதந்திர வாழ்வையோ என்றும் தரப்போவதில்லை என்ற உண்மை நிலைஅயை  ஈழத் தமிழ் மக்களை உணர வைத்த, ஆழப் படிந்த இனப்படுகொலைகளில் இதுவும் ஒன்றானது.
நவாலிப்படுகொலையில் உயிர் நீத்த மக்களை ஈழத் தமிழ் மக்கள் ஆண்டு தோறும் நினைவுகூர்ந்து நவாலி வடக்கு சோமசுந்தரப் புலவர் வீதியிலும், நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயப்பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள இனப்படுகொலைச் சின்னங்களிலும் மக்கள் தமது அஞ்சலியை செலுத்துகிறார்கள். அத்துடன் புலம்பெயர் நாடுகளிலும் மக்கள் இந்தப் படுகொலையை நினைவு கூர்கிறார்கள்.
« PREV
NEXT »

Facebook Comments APPID