BREAKING NEWS
latest

Tuesday, July 24, 2018

தமிழ் மக்கள் பேரவைக்கு எதிராகவும் வழக்கு!- டெனீஸ்வரன்

தமிழ் மக்கள் பேரவை கடனாகப் பெற்ற இரண்டு லட்சம் ரூபா பணத்தில் ஒரு லட்சம் இதுவரை வழங்காதமை தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்ய எண்ணியுள்ளதாக
வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவையின் ஆரம்ப காலத்தில் எழுக தமிழ் நிகழ்வு ஏற்பாட்டிற்காக புலம்பெயர் தேச உறவுகளின் உதவிப் பணம் கிடைக்க காலதாமதமாகின்றமையினால் கடனாக 2 லட்சம் தந்துதவுமாறும் குறுகிய கால இடைவெளியில் அதனை மீளத் தருவதாகவே கூறியே பெற்றனர். இருப்பினும் பல தடவை கோரியதன் பெயரில் ஒரு லட்சம் ரூபா பணம் மட்டும் மீளக் கிடைத்தது. எஞ்சிய தொகையான ஒரு லட்சம் ரூபா இன்றுவரை கிடைக்கவே இல்லை.
இவ்வாறு மீள ஒப்படைக்காத ஒரு ஒட்சம் ரூபாவினை ஒப்படைக்குமாறுகோரி தமிழ் மக்கள் பேரவையினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்காக தயாராகியுள்ளேன். இதற்காக தற்போது சட்ட உதவியை நாடி உள்ளேன். அதன் பிரகாரம் இதனுடன் தொடர்பு பட்டவர்களிற்கு சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பிவைக்கப்படவுள்ளது . என்றார்.
இவ்வாறு அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவிப்பது தொடர்பில் இணைத் தலைவர்களில் ஒருவரான வைத்தியக் கலாநிதி லக்ஸ்மனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது ,இவ்வாறு நிதி வழங்கியமை பெற்றமை தொடர்பில் எனக்குத் தெரியாது. எனப் பதிலளித்தார்
« PREV
NEXT »

Facebook Comments APPID