BREAKING NEWS
latest

Tuesday, July 17, 2018

லயன்ஸ், றொட்டரி கழகங்களிடம் மன்னிப்புக் கோரினார் மங்கள!

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்காக நிதியமைச்சர் மங்கள சமரவீர மன்னிப்பு கோரியுள்ளார்.

 றொட்டரி மற்றும் லயன்ஸ் கழகங்களில் உள்ள பலர் போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக இருப்பதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்தநிலையில் குறித்த சமூச சேவை அமைப்புக்களை குற்றம் சுமத்தியமைக்கு அமைச்சர் மன்னிப்பை கோரியுள்ளார். குறித்த இரண்டு அமைப்புக்களும் இலங்கைக்கு சிறப்பை தரும் நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.

 எனவே குறித்த இரண்டு தரப்பிலும் எவருக்காவது தமது சொல், மனதை புண்படுத்தியிருந்தால், அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.
« PREV
NEXT »

Facebook Comments APPID