BREAKING NEWS
latest

Wednesday, July 18, 2018

மாற்றுத்திறனாளி சிறுமியை சீரழித்தவர்கள் மீது சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்குதல்.!

சென்னையில் 7 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு மயக்க ஊசி போட்டு 7 மாதங்களாக 17 பேர் தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்த சம்பவம் குலை நடுங்கச் செய்துள்ளது. சென்னை அயனாவரம் மகளிர் காவல்நிலையத்தில் இன்று ஒருபெண் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அந்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் புகாரில் சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் காது கேட்காத, சரியாக வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி எனக் கூறப்படுகிறது.
சிறுமி தனியாக இருக்கும் நேரங்களில், அடுக்குமாடி குடியிருப்பின் காவலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விவகாரம் கடந்த ஜனவரி மாதம் நடந்துள்ளது. காவலரை தொடர்ந்து சுமார் 17 பேர் மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். நாளுக்குநாள் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்து வரவே சிறுமியின் தாயார் சிறுமியிடம் சைகை ரீதியாக கேட்டு விவகாரத்தை தெரிந்துகொண்டதாக தெரிகிறது.
அதனை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்த காவல்துறையினர், அங்கிருந்த காவலர்கள் உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரித்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை கக்கிய நிலையில் காவலாளிகள், பிளம்பர், லிப்ட் ஆபரேட்டர், தண்ணீர் கேன் போடுபவர் என 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 17 பேரும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு வரும் 31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் இருந்து அவர்கள் 17 பேரையும் புழல் சிறைக்கு கொண்டு செல்ல போலீசார் ஆயத்தமாயினர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் இணைந்து 17 பேர் மீதும் சரமாரியாக அடித்து உதைத்து தாக்குதல் நடத்தினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து 17 பேரையும் பத்திரமாக மீட்டு வேனில் அமர வைத்தனர். அப்போதும் வழக்கறிஞர்கள் வேனை சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.
« PREV
NEXT »

Facebook Comments APPID