BREAKING NEWS
latest

Sunday, July 8, 2018

மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு நாள் நடைப் பவனி இன்று காலை வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு நாள் நடைப் பவனி இன்று காலை வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வடக்கில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் இந்த நடைப் பவனி காலை பத்துமணியளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
மட்டக்களப்பில் நான்கு முனைகளில் இருந்து மாற்றுத்திறனாளிகளின் நடை பவனி நடைபெற்றது.
எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் வடகிழக்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான பரா ஒலிப்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதனை முன்னிட்டு இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருநாள் நடை என்னும் தொனிப்பொருளில் இந்த நடை பயணம் ஆரம்பிக்கப்பட்டது.
பயனியர் வீதி, கோவிந்தன்வீதி, தாண்டவன்வெளி, கோட்டைமுனை ஆகிய பகுதிகளில் இருந்து நான்கு பிரிவுகளாக ஆரம்பமான பேரணி மட்டக்களப்பு காந்திபூங்காவினை வந்தடைந்தது.
இதேவேளை வடக்கில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமான மாற்றுத் திறனாளிகளுக்கான நடை பவனி துரையப்பா விளையாட்டரங்கை வந்தடைந்தது.
மேற்குறித்த இரு மாவட்டங்களிலும் இடம்பெற்ற இந்த நடைப் பவனியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு நாள் நடைப் பவனி, லண்டன் மாநகரிலும் இன்னும் சில மணித்தியாலங்களில் ஆரம்பமாகவுள்ளன.
பிரித்தானிய நேரம் காலை பத்துமணியளவில் Lee valley regional park, fishers green car park, stubbins hall lane, crooked mail, waltham abbay ஆகிய பகுதிகளூடாக இந்த நடை பவனி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
« PREV
NEXT »

Facebook Comments APPID