BREAKING NEWS
latest

Monday, July 16, 2018

எங்கள் ஈழக் குழந்தைக்கு பதில் என்ன தரப்போகிறாய் சிங்களனே?

வடதமிழீழம், 2009ஆம் ஆண்டு போரின் இறு­தி­யில் அருட்­தந்­தை­யு­டன் சர­ண­டைந்த எனது அப்பா எங்கே? இவ்­வாறு 9வய­துச் சிறுமி உருக்­க­மா­கக் கோரிக்கை விட்­டார். இதன்­போது அமர்­வி­லி­ருந்த பல­ரும் கண்­ணீர் விட்­ட­ழு­த­னர்.
கிளி­நொச்சி கூட்­டு­ற­வா­ளர் மண்­ட­பத்­தில் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரைத் தேடும் உற­வு­க­ளு­டன், காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கத்­தி­ன­ரின் சந்­திப்பு நடை­பெற்­றது. இந்­தச் சந்­திப்­பில் பங்­கேற்றே மேற்­படி சிறுமி தனது தந்தை எங்கே என்று கேள்வி எழுப்­பி­னார்.
2009ஆம் ஆண்டு போரின் இறு­தி­யில், அருட்­தந்தை பிரான்­சிஸ் ஜோசப்­பு­டன் நூற்­றுக்­க­ணக்­கான போரா­ளி­கள் உள்­படப் பலர் இரா­ணு­வத்­தி­ன­ரி­டம் சர­ண­டைந்­தி­ருந்­த­னர். இவர்­களை இலங்­கைப் போக்­கு­வ­ரத்­துச் சபைக்குச் சொந்­த­மான பேருந்­தில் இரா­ணு­வத்­தி­னர் ஏற்­றிச் சென்­றி­ருந்­த­னர்.
தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் திரைப்­ப­டப் பிரி­வில் கட­மை­யாற்­றிய திலக் என்­ப­வ­ரும் சர­ண­டைந்­தி­ருந்­தார். அவ­ரது ஒன்­பது வயது மகளே மிக உருக்­க­மாக தனது அப்­பா­வைத் தேடித்­தா­ரு­மா­றும் தான் இது­வரை அப்­பா­வின் முகத்தை பார்க்­க­வில்லை என்­றும் கோரி­யி­ருந்­தார்.
இதன் போது மண்­ட­பத்­தில் இருந்த கிராம அலு­வ­லர்­கள் உள்­படப் பலர் கண்­ணீர்­விட்டு அழு­த­னர்.
இந்­தச் சிறுமி 2009ஆம் ஆண்டு பதுங்­கு­ழிக்­குள் பிறந்­தாள் என்­றும் தனது அப்­பா­வின் முகத்தை இது­வரை காணா­த­வர் என்­றும் சிறு­மி­யின் அம்­மம்மா குறிப்­பிட்­டார்
« PREV
NEXT »

Facebook Comments APPID