BREAKING NEWS
latest

Monday, July 23, 2018

குரோ­சி­யா­வின் வெற்­றி­யும் தமி­ழர்­க­ளின் சுய­ம­திப்­பீ­டும்!

உல­கக் கிண்­ணக் கால்­பந்­துப் போட்டி ரஷ்­யா­வில் கோலா­க­ல­மாக நடந்து முடிந்­துள்­ளது. பெரும் எதிர்­பார்ப்­பு­க­ளைக் கொண்­டி­ருந்த பெரிய அணி­கள் தோல்­வி­யுற்று போட்­டி­யி­லி­ருந்து வெளி­யேற, அதி­கம் எதிர்­பார்க்­கப்­ப­டாத, வய­தா­ன­வர்­க­ளின் அணி என எள்ளி நகை­யா­டப்­ப­ட்ட குரோ­சியா இறு­திப் போட்­டிக்­குத் தகுதி பெற்­றது. அரை­யி­றுதி ஆட்­டத்­தில் இங்­கி­லாந்து அணி­யைத் தோற்­க­டித்­த­தன் மூலம் தம் மீதான விமர்­ச­னங்­கள் அனைத்­திற்­கும் முற்­றுப்­புள்ளி வைத்­தது அந்த அணி.
நீண்ட போராட்­டத்­திற்­குப் பின்­னர், அந்த அணி இந்­தச் சாத­னை­யைப் படைத்­துள்­ளது. குரோ­சியா இலங்­கை­யை­வி­டச் சிறிய நாடு. 56ஆயி­ரம் சதுர கிலோ மீற்­றர்­கள் பரப்­ப­ள­வைக் கொண்­டது. 48 லட்­சம் பேரை மட்­டுமே மக்­கள் தொகை­யா­கக் கொண்­டது. பெரும்­பான்­மை­யி­ன­ரா­கக் குரோட் இனத்­த­வர்­கள் வாழ்க்­கின்­றார்­கள். செர்ப் மற்­றும் ட்ச்சுக்­கா­ரர்­கள் சிறு­பான்­மை­யி­ன­ராக வாழ்­கி­றார்­கள்.
தன்­னு­டைய இருப்­பைத் தக்க வைப்­ப­தற்­கா­கக் குரோ­சியா பல போராட்­டங்­களை நடத்­தி­யி­ருக்­கி­றது. 1941இல் யுகோஸ்­லா­வியா இந்த நாட்­டைக் கைப்­பற்­றி­யது. அது முதல் தனது விடு­த­லைக்­கான பய­ணத்தை குரோ­சியா ஆரம்­பித்­தது. ஜேர்­மனிய சர்­வா­தி­காரி ஹிட்­ல­ருக்கு ஆத­ர­வாக இருந்த யுகோஸ்­லா­விய அர­சு­டன் ஒத்­து­ழைக்க மறுத்து, கிளர்ச்­சி­யில் இறங்­கின குரோ­சி­யா­வின் பெரும்­பான்­மை­யான பகு­தி­கள். அதன் விளை­வாக ஒரு கூட்­ட­ரசு (சமஷ்டி) முறை­மைக்கு யுகோஸ்­லா­வியா இறங்கி வந்­தது. 1991ஆம் ஆண்டு ஜு ன் மாதம் 25ஆம் திகதி தன்னை ஒரு சுதந்­திர நாடா­கக் குரோ­சியா அறி­வித்­தது. அதைத் தொடர்ந்து சுமார் 4 வரு­டங்­கள் குரோ­சி­யா­வின் சுதந்­தி­ரத்­துக்­கான போர் நடந்­தது.
யுகோஸ்­லா­வி­யா­வில் பெரும்­பான்­மை­யி­னர் சேர்­பி­யர்­கள். பின்­னாள்­க­ளில் இதே சேர்­பி­யர்­கள் ,பொஸ்­னி­யா­வில் மேற்­கொண்ட இனப்­ப­டு­கொலை உல­கப் புகழ் வாய்ந்­தது. அத்­த­கைய சேர்­பிய இரா­ணு­வம், குரேட் மக்­க­ளுக்கு எதி­ராக நிகழ்த்­திய அட்­டூ­ழி­யங்­க­ளும், கொலை­ க­ளும், வன்­பு­ணர்­வு­க­ளும் வார்த்­தை­க­ளால் வடிக்க முடி­யா­தவை. “ஏய் சுலோபோ.. சாலட்­களை அனுப்பு.. இறைச்­சிக்கு நாங்­கள் தூயக் குரோ­சி­யர்­க­ளின் சதை­களை அறுக்­கி­றோம்” என்­கிற வன்­மம் மிக்க பாடல் போர்க் காலத்­தில் சேர்­பி­யர்­க­ளி­டம் பிர­ப­லம் என்­கிற தக­வ­லும் உண்டு.
இந்த வன்­முறை மிக்க, இனப்­ப­டு­கொ­லைக்கு அஞ்­சாத இரா­ணு­வத்­து­டன் போரிட்டு தனது விடு­த­லையை முழு­மை­யாக 1995இல் அடைந்­தது குரோ­சியா. அதன் பின்­னர் துரி­த­மான வளர்ச்­சியை நோக்கி முன்­னேறி வரு­கின்­றது. ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லும் இணைந்து கொண்­டது. வாழ்­வ­தற்கு ஆகச் சிறந்த நாடு­க­ளில் ஒன்று என்று இன்று பட்­டி­ய­லி­டப்­ப­டும் அள­வுக்கு அதன் வளர்ச்சி பாராட்­டத்­தக்­கது.
1998 முதல் நடந்த எல்லா உல­கக் கிண்­ணக் கால் பந்­துப் போட்­டி­க­ளி­லும் பங்­கேற்­றுள்­ளது குரோ­சியா. அணி­யின் தலை­வ­ரான மொட்­ரிச் தனது 12ஆவது வய­தி­லேயே சுதந்­தி­ரப் போராட்­டத்­தில் கலந்­து­கொண்­ட­வர். தனது தாத்தா தன் முன்னே சுட்­டுக்­கொல்­லப்­ப­டு­வ­தைத் தன் கண்­க­ளா­லேயே கண்­ட­வர். அணி­யில் இருந்த ஒரே­யொரு அனு­ப­வ­சா­லி­யான வீரர். ஐரோப்­பிய கழ­கங்­க­ளுக்­காக புகழ்­பெற்ற வீரர்­க­ளு­டன் இணைந்து ஆடிய அனு­ப­வம் அவ­ருக்கு மட்­டுமே பெரு­ம­ள­வில் இருந்தது. ஆனா­லும் அணியை ஒருங்­கி­ணைத்து, பயிற்­று­வித்து, திறம்­பட வழி­ந­டத்தி, அவ­மா­னங்­க­ளை­யும் கேலி­செய்­யும் விம­சர்­னங்­க­ளை­யும் கடந்து வெற்­றி­யின் அருகே அணியை அழைத்­துச் செல்ல அவ­ரால் முடிந்­தது.
குரோ­சிய அணி­யின் இந்­தச் சாதனை அதன் வெறும் கால்­பந்­தாட்ட அடைவு மட்­டும் அல்ல; உலக வரை படத்­தில் தன்னை, தனது சுயத்­து­டன் நிலை­ நி­றுத்­து­வ­ தற்­கு­மா­னது. சுதந்­திர தாகத்­து­டன் மிக நீண்ட காலப் போராட்­டத்தை நடத்­திய குரோ­சி­யா­வின் இந்த வளர்ச்சி எமக்­கும் நல்­ல­தொரு உதா­ர­ணம். போருக்­குப் பின்­னர் 10 வரு­டங்­க­ளைக் கடந்­து­விட்ட நாம், எமது பய­ணம் எத்­த­கை­யது என்­பதை சுய­ம­திப்­பீடு செய்து கொள்­வ­தற்கு குரோ­சி­யா­வின் வெற்றி துணை நிற்­கட்­டும்.
« PREV
NEXT »

Facebook Comments APPID