BREAKING NEWS
latest

Wednesday, July 18, 2018

அவுஸ்திரேலிய அரசாங்கத்தை கண்டித்துள்ள ஏதிலிகள் பேரவை


சிட்னியில் வசித்து வந்த இலங்கை குடும்பம் ஒன்றை பிரித்த விடயத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தை ஐக்கிய நாடுகளின் ஏதிலிகள் பேரவை கடுமையாக கண்டித்துள்ளது.
அதன் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

11 மாத குழந்தையும், மனைவியும் அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பு வீசாவின் மூலம் வசிக்க அனுமதித்த அவுஸ்திரேலிய அரசாங்கம், திலீபன் என்ற இலங்கையரை மாத்திரம் நாடுகடத்தியுள்ளது.
அவர் நாடுகடத்தப்படுவதற்கு முன்னதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகளின் ஏதிலிகள் பேரவை, அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்தவிடயத்தில் முக்கிய அவதானம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக குடும்ப ஐக்கியம் மற்றும் சிறுவர் உரிமை என்பவற்றைக் கருத்திற்கொண்டு அவர் நாடுகடத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
ஆனால் நேற்றையதினம் அவுஸ்திரேலியாவில்  இருந்து நாடுகடத்தப்பட்ட 18 இலங்கையர்களில், திலீபனும் உள்ளடங்குவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. 
இதற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள சட்டத்தரணிகள் அமைப்பு, ஏதிலிகள் பேரவை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதேநேரம், இலங்கையில் தமது கணவரின் பாதுகாப்பு குறித்து, தீலிபனின் மனைவி கவலை வெளியிட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
தமது கணவர் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டமை குறித்து திலீபனின் மனைவி வேதனை அடைந்;துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது பெண் குழந்தையை வளர்ப்பதற்கு தந்தையின் உதவி அவசியமாகும் என்றும் தற்போதைய நிலையில் தமக்கு வேறு வழி எதுவும் தெரியவில்லை என்று கார்த்திகா குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
« PREV
NEXT »

Facebook Comments APPID