BREAKING NEWS
latest

Monday, July 2, 2018

இறப்பின் பின்னரும் மக்களின் மனங்களில் இளவரசி டயானா!

இறப்பின் பின்னரும் மக்களின் மனங்களில் வாழ்வோர் வெகு சிலரே.
அத்தகையோரில் ஒருவரான இங்கிலாந்து இளவரசி டயானாவின் 57 ஆவது பிறந்தநாள் (1) நேற்று ஆகும்.
ஏகாதிபத்திய உலகின் தொண்டுள்ளம் கொண்ட கனவுக் கன்னியாகக் காட்டப்பட்ட டயானாவின் வாழ்க்கை அனைவராளும் மறக்க முடியாத ஒரு டயரி. திரும்பி பார்க்கும் போது ஆழ்ந்த விடயங்களை கற்று கொடுக்கும்.
டயானா வாழ்ந்த காலத்தில் எப்போதும் அவரது பெயர், ஏதாவது காரணங்களால் இங்கிலாந்து பத்திரிக்கைகளில் தவறாது இடம் பெற்று வந்த இவர் 1961 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி பிறந்தார். இவரின் இயற்பெயர் பிரான்செஸ் ஸ்பென்சர் என்பதாகும்.
டயானா தனது 19 ஆவது வயதில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸை மணந்து உலகப் பிரபலமானார்.
டயானா – அரண்மனை ஆடம்பர வாழ்வும் களிவெறியாட்டமும் கொண்டிருந்த இளவரசி. கணவர் வேல்ஸ் இளவரசருடன் ஏற்பட்ட மணமுறிவைத் தொடர்ந்து, பழமைவாத சலிப்பூட்டும் அரண்மனை வாழ்விலிருந்து வெளியே வந்து, ஆடம்பர விளம்பரத்துடன் சமூக நலனில் அக்கறை உள்ளவராகத் தன்னைக் காட்டிக் கொண்டார், டயானா.
“எய்ட்ஸ் நோயாளிகள், கண்ணி வெடிகளை அகற்றுதல் முதலானவற்றுக்காக தனது விலை மதிப்பற்ற ஆடைகளை ஏலம் விட்டு நிதி திரட்டினார்; பாதிக்கப்பட்டோரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்” என்று அவரது சமூகத் தொண்டுகளைப் பட்டியலிட்டு “மக்களின் இதயங்களில் வாழ்ந்த இளவரசி” என்று பத்திரிகை உலகம் பாராட்டுகிறது.
தனது கணவர் சார்லஸுக்கு கமீலாவுடன் தொடர்பு இருப்பதை அறிந்த டயானா, மனதளவில் உடைந்து போனார். தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகளை மறக்க, பல சமூக நலத் திட்டங்களில் அதிகமாக ஈடுபட ஆரம்பித்திருந்தார்.
கணவருடனான விவாகரத்திற்குப் பின்னர் பல ஆண்களுடன் டயானா இணைத்துப் பேசப்பட்டார்.
ஒரு கட்டத்தில் ஊடகங்களின் துரத்தலே டயானாவின் உயிருக்கு ஆபத்தைக் கொணர்ந்தது.அரபு நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரரான முகமது ஹல் என்பவரின் மகன் டோடியுடன், டயானாவுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட நெருக்கம் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இவர்கள் இருவரும் செல்லுமிடமெல்லாம் பத்திரிகைக்காரர்கள் அவர்களைத் துரத்தினார்கள். அவ்வாறே 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி பாரிசில் காரில் சென்ற டயானா, டோடியை பத்திரிகைப் புகைப்படக்காரர்கள் துரத்தினார்கள்.
அப்போது அவர்களிடமிருந்து தப்பியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் வேகமாகச் சென்ற டயானாவின் கார் விபத்தில் சிக்கியது. இதில், டயானா, டோடி இருவருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.
டயானா என்ற புன்னகை அரசியின் மரணச் செய்தியை கேள்விப்பட்ட உலகமே வேதனையில் உருகி கண்ணீர் விட்ட காட்சி ஒரு சாதாரண முடிவு அல்ல.
டயானாவின் இறுதி ஊர்வலத்தை, சுமார் 2.5 பில்லியன் மக்கள் தொலைக்காட்சி மூலம் பார்வையிட்டுள்ளனர்.
இன்றளவும் டயானாவின் கல்லறைக்கு தினமும் குவியும் பல்லாயிரக்கணக்கான மலர்களே, மக்கள் அவர் மீது கொண்டிருந்த அளவில்லா அன்பிற்கு சாட்சி

« PREV
NEXT »

Facebook Comments APPID