BREAKING NEWS
latest

Thursday, July 19, 2018

ப்ரிக்சிட் விவகாரம் தொடர்பான சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு


இலங்கையின் முன்னைய அரசாங்கத்திடம் இருந்து வரப்பிரசாதங்களைப் பெற்ற பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால், அந்த நாட்டின் பிரதமர் தெரேசா மே இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அழுத்தத்துக்கு உட்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த வட அன்றிமிற்கான பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் இயன் பெய்ஸ்லி ஜுனியர், இலங்கையின் முன்னைய அரசாங்கத்தின் அனுசரணையில் இரண்டு தடவைகள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
இதற்காக அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் 1 லட்சம் பவுண்களுக்கும் அதிகமான தொகை இலங்கையின் முன்னைய அரசாங்கத்தினால் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2013ம் ஆண்டுக்குப் பின்னர் அவர் தமது குடும்ப உறுப்பினர்கள் சகிதம் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இதன்பின்னர் 2014ம் ஆண்டு, இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவிருந்த பிரேரணையை ஆதரவளிக்க வேண்டாம் என்று பிரித்தானியாவின் அப்போதைய பிரதமர் டேவிட் கமரனுக்கு அவர் கடிதத்தையும் அனுப்பி இருந்தார்.

இதுதொடர்பில் விசாரணை நடத்திய பிரித்தானிய நாடாளுமன்றக் குழு அவரை 30 நாட்களுக்கு நாடாளுமன்றத்தில் இருந்து இடைநிறுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில் எதிர்வரும் நொவம்பர் மாதம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில், ப்ரிக்சிட் விவகாரம் தொடர்பான சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு வருகிறது.

இந்த சட்டமூலத்துக்கு ஆதரவளிப்பதாக தெரேசா மேயிடம் உறுதியளித்த ஜனநாயக தொழிற்சங்க கட்சியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும், இயன் பெயிலிஸும் ஒருவராவார்.

அவர் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வடக்கு அன்றிம் பிராந்திய மக்கள், புதிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்காக இடைத்தேர்தல் ஒன்றை கோரி இருப்பதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான மனுவில் கைச்சாத்திடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், அவரது தேர்தல் தொகுதியின் 10 சதவீத வாக்காளர்கள் கைச்சாத்திட்டால், தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்தவிடயம் பிரித்தானிய பிரதமர் தெரேசே மேயிற்கு மேலதிக அழுத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
« PREV
NEXT »

Facebook Comments APPID