BREAKING NEWS
latest

Monday, July 23, 2018

இலங்கையில் மனித உரிமைகளை கட்டியெழுப்பும் பணிகள் ஸ்தம்பிக்கும் நிலையில்


இலங்கையில் மனித உரிமைகளை கட்டியெழுப்பும் பணிகள் ஸ்தம்பிக்கும் நிலையை அடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத எதிர்ப்பு குறித்தி சிறப்புப் பிரதிநிதியின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக தமிழ் கார்டியன் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு உள்ளடங்கிய அறிக்கை இந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதி Ben Emmerson வெளியிடவுள்ளார்.

இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்காக முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் எந்தவகையிலும் முன்னேற்றத்தை அடையவில்லை.

இந்த நிலையில், தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்துள்ளதாக சிறப்பு பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தீவிரவாத ஒழிப்புச் சட்டத்தினை பயன்படுத்தி அதன் ஊடான துன்புறுத்தல்கள் தொடர்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன்,

இத்தகைய நிலைகளை கட்டுப்படுத்துவதற்கு கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை இடர்கள் குறித்து நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்
« PREV
NEXT »

Facebook Comments APPID