BREAKING NEWS
latest

Thursday, July 19, 2018

மதுரையில் தங்கையின் காதல் கணவர் மற்றும் அவரது தாயாருக்கு அரிவாள் வெட்டு: அண்ணன் வெறிச் செயல்

மதுரையில் தங்கையின் காதல் கணவர் மற்றும் அவரது தாயார் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய நபரையும் அவரது ஆட்களையும் போலீசார் தேடி வருகின்றனர். மதுரை சந்தைப்பேட்டை பகுதியைச் பொன்ராஜ் என்பவர் வசித்து வந்தார். 
இவர் கால்டாக்சி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த செல்வமீனாட்சி என்ற பெண்ணை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களது காதலுக்கு செல்வமீனாட்சி வீட்டில் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பொன்ராஜ் - செல்வமீனாட்சி இருவரும் கோவிலுக்குச் சென்று திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து சந்தைப்பேட்டை பகுதியில் காதல் திருமணம் செய்து கொண்ட பொன்ராஜ் - செல்வமீனாட்சி ஜோடி தனியாக வாடகை வீடுபிடித்து தங்கி இருந்தனர்.

இந்நிலையில் தங்கையின் காதல் திருமணத்தால் ஆத்திரமடைந்த செல்வ மீனாட்சியின் அண்ணன் பிரபாகர், தனது ஆட்களுடன் பொன்ராஜ் தங்கியிருந்த வீட்டிற்கு அரிவாளுடன் சென்றுள்ளார். அங்கு பொன்ராஜையும், அவரது தாயாரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு பிரபாகர் தலைமையிலான கும்பல் தப்பிச் சென்றது. இதில் படுகயாமடைந்த பொன்ராஜூம் அவரது தயாரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மதுரை தெப்பக்குளம் போலீசார், தலைமறைவாகி உள்ள பிரபாகரையும் அவரது ஆட்களையும் தேடி வருகின்றனர்
« PREV
NEXT »

Facebook Comments APPID