BREAKING NEWS
latest

Wednesday, July 11, 2018

கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு: தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 75,000 கனஅடியாக உயர்வு

கர்நாடக அணைகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விரைவில் 75,000 கன அடியை எட்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையால் கபினி அணைக்கு வினாடிக்கு 42,000 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. கபினி அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் அணையில் இருந்து வினாடிக்கு 45000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் கபினி, கேஆர்எஸ் அணை களுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கர்நாடக அணைக்களுக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 1 லட்சம் கன அடி அடியாக அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடருமானால் ஓரிரு நாளில் தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 75,000 கன அடியை எட்டும் என்று கர்நாடக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
« PREV
NEXT »

Facebook Comments APPID