BREAKING NEWS
latest

Wednesday, July 4, 2018

நாவற்குழி வீடமைப்பு அதிகார சபையின் காணியில் வசிக்கும் 65 குடும்பங்களும் நிர்க்கதியாகுமா?

வடமாகாணம், நாவற்­கு­ழி­யில் வீட­மைப்பு அதி­கார சபைக்­குச் சொந்­த­மான காணி­யில் அத்­து­மீ­றிக் குடி­யே­றி­னர் என்று தெரி­விக்­கப்­பட்டு 65 தமிழ்க் குடும்­பங்­கள் மீது வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.
வீட­மைப்பு அதி­கார சபை­யின் தலை­வர் சாவ­கச்­சேரி நீதி­மன்­றில் தனித்­த­னி­யாக நேற்று வழக்­கு­கள் தாக்­கல் செய்­துள்­ளார்.
ஐந்து வரு­டங்­க­ளுக்கு மேலாக நாவற்­கு­ழி­யில் உள்ள படை­மு­காமை அண்­டி­யுள்ள வீட­மைப்பு அதி­கார சபைக்­குச் சொந்­த­மான பகு­தி­யில் 65 தமிழ்க குடும்­பங்­கள் குடி­யேறி வசிக்­கின்­ற­னர். அவர்­க­ளுக்கு எதி­ரா­கவே வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.
காணி­க­ளில் இருந்து வெளி­யே­று­மாறு அறி­வுத்தி அந்­தக் குடும்­பங்­க­ளுக்கு கடந்த மே 28ஆம் திகதி பதி­வுத் தபால் அனுப்­பப்­பட்­டது.
வீட­மைப்பு அதி­கார சபை­யால் வழங்­கப்­பட்ட காலக்­கெ­டு­வுக்­குள் 65 குடும்­பங்­க­ளும் வெளி­யே­றா­த­தால் நீதி­மன்­றின் உத­வியை வீட­மைப்பு அதி­கார சபை நாடி­யுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.
« PREV
NEXT »

Facebook Comments APPID