BREAKING NEWS
latest

Tuesday, July 3, 2018

4 ஆம் திகதி நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கின்றேன்- கல்வி அமைச்சர்

பாடசாலைக் கல்வி நடவடிக்கையைச் செயலிழக்கச் செய்வதற்கு எதிர்வரும் 4 ஆம் திகதி முன்னெடுக்கப்படப் போகும் நடவடிக்கையை கல்வி அமைச்சர் என்ற வகையில் மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன் என அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு சீராக செயற்பட்டு வரும் கல்வி நடவடிக்கையை குழப்ப வேண்டாம் என வினயமாக கேட்டுக் கொள்கின்றேன் எனவும் கல்வி அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
தகுதியற்ற எவருக்கும் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. தகுதியிருந்தும் அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்டவர்களையே தகுதியுடன் பதவி உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்

« PREV
NEXT »

Facebook Comments APPID