BREAKING NEWS
latest

Tuesday, July 17, 2018

இறந்த நிலையில் கரையொதுங்கிய 35 அடி நீளமான திமிங்கலம்!

கற்பிட்டி ஆலங்குடா கடற்கரைப் பிரதேசத்தில் நேற்று காலை திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. சுமார் 35 அடி நீளமும், 8 அடி அகலமும் கொண்ட திமிங்கலம் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன் இறந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

திமிங்கலத்தின் உடல் மோசமாக சிதைந்த நிலையில் காணப்படுவதுடன், துர்நாற்றம் வீசுகிறது. திமிங்கலம் இறந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இறந்த நிலையில் கரையொதுங்கிய குறித்த திமிங்கலத்தை பார்வையிட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர்.

இதேவேளை, கற்பிட்டி பிரதேச செயலகம், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட குழு குறித்த கடற்பிரதேசத்திற்கு விஜயம் செய்து இறந்த நிலையில் கரையொதுங்கிய திமிங்கலத்தை பார்வையிட்டதுடன், அதனை அந்த இடத்திலேயே புதைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர் எனவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.
« PREV
NEXT »

Facebook Comments APPID