BREAKING NEWS
latest

Friday, July 20, 2018

மானியமாக 1.6 பில்லியன் இலங்கை ரூபாக்கள்


இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரான  யு.எஸ்.எயிட் அமைப்பு 1.6 பில்லியன் இலங்கை ரூபாக்கள்  மேலதிக மானியமாக வழங்கியுள்ளது.

கொழும்பில் அமெரிக்க தூதரகத்தின் ஊடக அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூகோள சமுக அமைப்புகள் இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் மற்றும் உள்ளுர் சிவில் அமைப்புகளின் பங்களிப்புடன், 3 வருடங்களுக்கான வேலைத்திட்டத்துக்கு அமெரிக்க யு.எஸ்.எயிட் பங்களிப்பு செய்யவுள்ளது.

மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் நிலவுகின்ற சவால்களை அடையாளம் கண்டு தீர்க்கும் முகமாக இந்த வேலைத்திட்டம் அமுலாக்கப்படுகிறது.
« PREV
NEXT »

Facebook Comments APPID