BREAKING NEWS
latest

Thursday, July 5, 2018

யாழ். கச்சதீவுக் கடலில் மீன்பிடித்த 12 இந்திய மீனவர் கைது

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் இன்று வியாழக்கிழமை(05) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.கச்சதீவுக் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போதே குறித்த 12 மீனவர்களும் இன்று அதிகாலை ஒரு மணியளவில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பல படகுகளில் மீன்பிடியில் ஈடுபட வந்த நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்கள் கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களையும் யாழ்ப்பாண நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

Facebook Comments APPID