BREAKING NEWS
latest

Monday, June 18, 2018

இராணுவத்தை காட்டிக் கொடுக்கின்றார்களாம் - மகிந்த ஆதங்கம்

தங்களை யார் ஆட்சிக்கு கொண்டு வந்தார்களோ அவர்களை திருப்திப்படுத்துவதற்கே இந்த அரசாங்கம் இராணுவத்தை காட்டிக் கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குற்றவியல் விடயங்கள் தொடர்பிலான பரஸ்பர ஒத்துழைப்பை வழங்கும் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேசிய அரசாங்கம் தம்மை ஆட்சிக்கு கொண்டு வந்த அனைத்து சர்வதேச சக்திகளுக்கும் நன்றிக்கடன் செலுத்தவே எமது இராணுவத்தை காட்டிக் கொடுக்கும் நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது.

தற்போதைய கூட்டணி அரசாங்கம் குற்றவியல் விடயங்கள் தொடர்பிலான பரஸ்பர ஒத்துழைப்பை வழங்கும் சட்டத்தை திருத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிய முடிந்துள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க குற்றவியல் விடயங்கள் தொடர்பாக பரஸ்பர ஒத்துழைப்பு வழங்கும் சட்டத்தை திருத்துவதற்காக சட்டமூல நகல் பத்திரமொன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே தேசிய அரசாங்கம் தம்மை ஆட்சிக்கு கொண்டு வந்த அனைத்து சர்வதேச சக்திகளுக்கும் நன்றிக்கடன் செலுத்தவே எமது இராணுவத்தை காட்டிக் கொடுக்கும் நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக குற்றவியல் விடயங்கள் தொடர்பிலான பரஸ்பர ஒத்துழைப்பை வழங்கும் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு சர்வதேச தலையீடுகளை பலப்படுத்த தீர்மானித்துள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

Facebook Comments APPID