BREAKING NEWS
latest

Sunday, July 1, 2018

அமெரிக்காவில் இளைஞருடன் உலாவும் ஒபாமா மகள்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மகள் மலியா ஒபாமா இளைஞர் ஒருவருடன் சிரித்து கொண்ட பேசி வந்தது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பராக் ஒபாமா அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை இருந்து வந்தார்.

இவருக்கு மலியா ஒபாமா, சாசா ஒபாமா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கிரீன்விச் கிராமத்தில் இருக்கும் வீதியில் ஒபாமாவின் மூத்த மகள் மலியா ஒபாமா இளைஞர் ஒருவருடன் கடந்த சனிக்கிழமை சிரித்துக் கொண்டே நடந்து சென்றுள்ளார்.

ஆனால் அந்த இளைஞர் யார் என்பது குறித்து தெரியவில்லை என்று உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இருவரும் அங்கிருக்கும் வீதியில் பேசிக் கொண்டே வந்தது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

« PREV
NEXT »

Facebook Comments APPID