BREAKING NEWS
latest

Saturday, June 30, 2018

பலாலி விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்படாது! - முதலமைச்சர் விக்னேஸ்வரன்


பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு, இந்திய அரசின் நிதியுதவியை பெற்றுக் கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார் என்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்திய தூதரக அதிகாரிகளுடன் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கம் வெளியிடப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

“1960ஆம் ஆண்டுகளில் சென்னை விமான நிலையத்திற்கும், பலாலி விமான நிலையத்திற்கும் இடையில் விமான சேவைகள் நடைபெற்றன. இதனால், விமான நிலையத்தை மீண்டும் அபிவிருத்தி செய்ய இந்தியாவிடம் முதலில் நானே நிதியுதவியை கோரியிருந்தேன். அண்மையில் பலாலி விமான நிலைய பகுதியை பார்வையிட்ட இந்திய அதிகாரிகள் அந்த விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என உறுதியை வழங்கியிருந்தனர். பலாலி விமான நிலையம் எந்த வகையிலும் இந்தியாவுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும், அதன் அபிவிருத்திக்காக மாத்திரம் இந்தியாவிடம் இருந்து நிதியுதவியை பெற்றுக்கொள்வதாகவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்
« PREV
NEXT »

Facebook Comments APPID