BREAKING NEWS
latest

Sunday, July 1, 2018

புலி­க­ளின் தங்­க­த்தைத் தேடிய படை­யி­னருக்கு தண்ணி காட்டிய ஆமை

புலி­க­ளின் தங்­க­த்தைத் தேடிய படை­யி­னர் இறு­தி­யில் ஆமை ஒன்­றைக் கண்­டு­ பி­டித்­த­னர். அந்த ஆமை பத்­தி­ர­மாக அரு­கில் இருந்த நீரோ­டை­யில் விடப்­பட்­டது. கிளி­நொச்சி, கன­காம்­பி­கைக் குளத்­துக்கு அண்­மித்த பகு­தி­யில் இந்­தச் சம்­ப­வம் இடம்­பெற்­றது.

விடு­த­லைப் புலி­க­ளால் புதைத்து வைக்­கப்­பட்­ட­தாக நம்­பப்­ப­டும் தங்­கத்­தைத் தேடி கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இந்த இடத்­தில் முதல் அகழ்­வு­கள் நடை­பெற்­றன.

கிளி­நொச்சி மாவட்ட நீதி­மன்ற அனு­ம­தி­யு­டன் நீதி­மன்­றப் பதி­வா­ளர், கரைச்­சிப் பிர­தேச செய­லக உத்­தி­யோ­கத்­தர்­கள், கிராம அலு­வ­லர் முன்­னி­லை­யில் அகழ்­வுப் பணி­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எனி­னும் தங்­கம் எது­வும் அகப்­ப­ட­வில்லை.

நேற்­று­ முன்­தி­ன­மும் நீதி­மன்ற அனு­ம­தி­யு­டன் அகழ்­வுப் பணி­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.பிற்­ப­கல் ஆரம்­பிக்­கப்­பட்ட அகழ்­வுப் பணி­கள் இரவு 9 மணி­வரை நீடித்­தது. சுமார் 5 மணி நேரம் அகழ்வு நடை­பெற்­ற­போ­தும் தங்­கம் சிக்­க­வில்லை.

அகழ்­வுப் பணி­க­ளின் போது ஆமை ஒன்று உயி­ரு­டன் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அந்த ஆமை அரு­கில் உள்ள நீரோ­டை­யில் பாது­காப்­பாக விடப்­பட்­டது.
« PREV
NEXT »

Facebook Comments APPID