BREAKING NEWS
latest

Wednesday, June 27, 2018

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் இந்தியர் ஒருவருக்கு சொந்தமான பாரிய கப்பல் ஒன்று முழ்கியுள்ளது

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் பாரிய கப்பல் ஒன்று முழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த கப்பலில் இருந்து 11 மாலுமிகள் காப்பற்றப்பட்டுள்ளனர்.


கொழும்பு துறைமுகத்தில் இருந்து 11 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல் மூழ்கியுள்ளது. Mutha Pioneer என்ற சரக்குக் கப்பலே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது.
குறித்த கப்பல் இந்தியர் ஒருவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. டொமினிக்கன் குடியரசு கொடியுடன் இந்த கப்பல் பயணித்துள்ளது.


குறித்த கப்பலில் இருந்த 11 மாலுமிகளில் 10 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் இந்தோனேசியாவை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து குறித்த இடத்திற்கு விரைந்த இலங்கை கடற்படையினர் அவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.


« PREV
NEXT »

Facebook Comments APPID