BREAKING NEWS
latest

Wednesday, June 6, 2018

சந்திரனில் 31 மணிநேரம் நடமாடி சாதனை படைத்த விண்வெளி வீரர் மரணம்

சந்திரனில் கால் பதித்து நடந்து சாதனை படைத்த 12 விண்வெளி வீரர்களில் ஒருவர் ஆலன் பீன்

கடந்த 1969ம் ஆண்டில் சந்திரனுக்கு நாசா அனுப்பிய விண்கலத்தில் பயணம் செய்து, நிலாவில் கால் பாதித்த உலகின் நான்காவது விண்வெளி வீரர் என்ற பெருமையை தட்டிச் சென்றார். மேலும், சந்திரனில் 31 மணி நேரம் நடமாடி சாதனைப் படைத்தார்.

லன் பீன் கடந்த சிலமாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அமெரிக்காவின் ஹூஸ்டன் மருத்துவமனையில் கடந்த 2 வாரக் காலமாக சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி ஆலன் பீன் நேற்று காலமானார்.86 வயதான அலன் பீன் உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் அவதிப்பட்டமையினால் ஹீஸ்டனில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று (சனிக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்நிலையில், அவரது மரண செய்தியை நாசா விண்வெளி மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

1932 மார்ச் 15 ஆம் திகதி பிறந்த அலன் பீன் 1946 இல் அமெரிக்க கடற்படைச் சோதனை ஓட்ட விமானத்தின் விமானியாக பணிபுரிந்து 1963 ஆம் ஆண்டில் ‘நாசா’ விண்வெளி மையத்தில் இணைந்து பணியாற்றினார்.

மேலும் இவர் 2 தடவைகள் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அப்பல்லோ விண்கலம் மூலம் முதன் முதலில் நீல் ஆம்ஸ்ட்ராஸ் சந்திரன் சென்று திரும்பிய பின்னர் 4 மாதங்கள் கழித்து அப்பல்லோ விண்கலம் மூலம் 4 பேர் கொண்ட குழுவுடன் அலன் பின் சந்திரனுக்குச் சென்றார்.

கடந்த 1969 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி இடம்பெற்ற இப்பயணத்தின்போது அவர் சந்திரனில் இறங்கி நடந்ததன் மூலம் சந்திரனில் நடந்த 4 ஆவது விண்வெளி வீரர் ஆனார்.அப்போது சந்திரனில் தரை இறங்கி நடந்த அவர் அங்கு 32 அங்குலம் தோண்டி, பாறைகள், தாதுக்கள் மற்றும் தூசிகளை எடுத்து வந்தார்.

அவருடைய மரணத்தின் பின்னர் அலன் பீன் கருணையுள்ளம் கொண்ட ஒரு சிறந்த மனிதர் என 40 ஆண்டுகள் அவரோடு வாழ்ந்த அவரது மனைவி லெஸ்லி பீன் கண்கலங்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

Facebook Comments APPID