BREAKING NEWS
latest

Wednesday, June 20, 2018

கொட்டவ - காலி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து - வெளிநாட்டவர்கள் 2 பேர் பலி


கொட்டவ - காலி அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் வெளிநாட்டவர் இருவர் உயிரிழந்ததுடன், 3 பேர் காயமடைந்துள்ளனர்

குருதுகஹா பிரதேசத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் 4 வெளிநாட்டவர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைதனர்.

வெளிநாட்டவர்கள் சிலரை அழைத்து சென்ற வேன் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் வண்டியில் மோதுண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


கொள்கலன் வண்டியின் ஒரு டயரில் காற்று இறங்கியுள்ளது. சாரதி மற்றும் உதவியாளர் அதிவேக நெடுஞ்சாலையில் வாகனத்தின் டயர் மாற்றப்பட்டுள்ளது. இதன் போது வெளிநாட்டவர்களை அழைத்து வந்த வேன் இந்த வாகனத்துடன் மோதியுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த விபத்தில் வெளிநாட்டவர்கள் நான்கு பேர் உட்பட 5 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த சிறு பிள்ளை ஒன்றும் பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் இரண்டு வெளிநாட்டவர்கள் உட்பட மூவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
« PREV
NEXT »

Facebook Comments APPID